For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எனது சாவுக்கு மம்தாதான் காரணம்.. கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்த ஐபிஎஸ் அதிகாரியால் பரபரப்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    ஐபிஎஸ் அதிகாரியின் தற்கொலை கடிதத்தால் மம்தாவுக்கு சிக்கல்- வீடியோ

    கொல்கத்தா: எனது சாவுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிதான் காரணம் என ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் தற்கொலைக்கு முன்பு எழுதிய கடிதம் வைரலாகி வருகிறது.

    1986-ஆம் ஆண்டு ஐபிஎஸ் முடித்தவர் கௌரவ் தத். இவர் மேற்கு வங்கத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 19-ஆம் தேதி இவர் தனது வீட்டில் கை மணிக்கட்டை அறுத்துக் கொண்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த இவரது மனைவி, தத்தை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    பதவி ஏதும் இல்லை

    பதவி ஏதும் இல்லை

    இந்த நிலையில் கௌரவ் தத் தற்கொலை செய்து கொண்ட கடிதம் சிக்கியது. அதில் தத் குறிப்பிடுகையில், எனக்கு பதவி ஏதும் கொடுக்காமல் காத்திருப்புப் பட்டியலிலேயே வைத்திருந்தார் மம்தா. மேலும் நான் டிசம்பர் 31-ஆம் தேதி ஓய்வு பெற்ற பிறகும் எனக்கு வந்து சேர வேண்டிய தொகைகளை நிறுத்தி வைத்துள்ளார்.

    கடிதம்

    கடிதம்

    இதனால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன் என தனது தற்கொலை கடிதத்தில் தெரிவித்துள்ளார். இதையடுத்து மம்தா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தத்தின் மனைவி, உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளார்.

    சிபிஐ

    இதுகுறித்து பாஜக தலைவர் முகுல் ராய் கூறுகையில் அதிகாரியை தற்கொலைக்கு தூண்டிய மம்தா பானர்ஜியை கைது செய்ய வேண்டும். இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

    முதல் முறை

    முதல் முறை

    மேற்கு வங்க வரலாற்றில் அதிகாரி ஒருவர் தற்கொலை செய்து கொண்டது இதுவே முதல் முறை. அதில் அரசையோ அல்லது கட்சி தலைவரையோ குற்றம் கூறியிருப்பதும் முதல் முறையாகும் என முகுல் ராய் தெரிவித்துள்ளார். இந்த கடிதம் தற்போது வைரலாகி வருகிறது. இதனால் மம்தா அரசுக்கு சிக்கல் எழுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    English summary
    A 1986 batch IPS Officer blamed in his Suicide note names Mamata Banerjee.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X