For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கோலார் தமிழர்கள் மறுவாழ்வுக்கு வாய்ப்பு... மீண்டும் உயிர் பெறுகிறது தங்க வயல்!

Google Oneindia Tamil News

டெல்லி: கர்நாடக மாநிலம் கோலாரில் உள்ள தங்க வயலுக்கு புத்துயிர் கிடைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

இங்கு செயல்பாட்டை நிறுத்தி விட்ட இந்திய தங்க வயல் நிறுவனத்தை மீண்டும் உயி்ர்ப்பித்து செயல்படுத்தும் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது.

இதனால் கோலார் தங்க வயல் பகுதியில் வசித்து வரும் தமிழ்த் தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ளன.

கோலார் தங்கச் சுரங்கம்

கோலார் தங்கச் சுரங்கம்

கோலார் மாவட்டம் பங்கா்ருப்பேட்டை தாலுகாவுக்குட்பட்டது கோலார் தங்கவயல். இதை கேஜிஎப் என்று சுருக்கமாக அழைப்பார்கள்.

முழுக்க முழுக்கத் தமிழர்கள்

முழுக்க முழுக்கத் தமிழர்கள்

கோலார் தங்க வயல் முழுக்க முழுக்க தமிழர்களின் உழைப்பால் தங்கத்தை அள்ளித் தந்த தங்க வயலாகும்.

கோலாரிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில்

கோலாரிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில்

கோலார் நகரிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் தங்க வயல் உள்ளது. இங்கு தங்கம் வெட்டியெடுக்கும் பணியை பாரத் தங்க வயல் நிறுவனமும், பாரத் எர்த்மூவர்ஸ் நிறுவனமும் இணைந்து செயல்படுத்தி வந்தன.

நூற்றாண்டுக்கும் மேலாக

நூற்றாண்டுக்கும் மேலாக

இந்த தங்க வயலில் நூற்றாண்டுக்கும் மேலாக தங்கம் வெட்டியெடுக்கப்பட்டு வந்தது.

2001ல் மூடல்

2001ல் மூடல்

ஆனால் தங்கம் கிடைப்பது மிகவும் குறைந்து போய் விட்டதால் 2001ம் ஆண்டு இந்த தங்க வயல் மூடப்பட்டது. இதனா்ல் தமிழ்த் தொழிலாளர்கள் வேலை இழந்தனர்.

இன்னும் 30 லட்சம் டன் தங்க தாது

இன்னும் 30 லட்சம் டன் தங்க தாது

அதேசமயம், கோலார் தங்க வயலில் இன்னும் 30 லட்சம் டன் தங்கத் தாது இருக்கிறது.

மீண்டும் உயிர் பெறுகிறது

மீண்டும் உயிர் பெறுகிறது

இந்த நிலையில் தங்க வயலை மீண்டும் புதுப்பிக்க, உயிர்ப்பிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

ஒப்பந்தம் கையெழுத்து

ஒப்பந்தம் கையெழுத்து

பாரத் தங்கச் சுரங்க நிறுவனத்தை மீண்டும் செயல்படுத்துவது தொடர்பான ஒப்பந்தத்தை மத்திய அரசின் சுரங்கத்துறை அமைச்சகம் போட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில், மினரல் எக்ஸ்ப்ளரோஷன் கார்ப்பரேஷன் நிறுவனம், பாரத் தங்கச் சுரங்க நிறுவனம், மெக்கான் லிமிட்டெட் என்ற அரசு பொதுத்துறை நிறுவனம் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.

ஆலோசனை நிறுவனம் மெக்கான்

ஆலோசனை நிறுவனம் மெக்கான்

மெக்கான் நிறுவனம், பிஜிஎம்எல் எனப்படும் பாரத் தங்கச் சுரங்க நிறுவனத்தின் ஆலோசனை நிறுவனமாக செயல்படவுள்ளது. உலகளாவிய ஏல நடைமுறைகள் குறித்து இது ஆலோசனை தரும்.

மன்மதா ராசா பாட்டு படமாக்கப்பட்ட தங்க வயல்

மன்மதா ராசா பாட்டு படமாக்கப்பட்ட தங்க வயல்

தற்போது செயல்படாமல் கிடக்கும் கோலார் தங்க வயலில்தான் தனுஷ், சாயாசிங் ஆகியோர் அதி வேகமாக நடனடமாடிய மன்மதா ராசா பாடல் படமாக்கப்பட்டு பெரும் ஹிட்டானது என்பது நினைவிருக்கலாம்.

English summary
Centre has taken steps to revive BGML, which is taking care of now defunct KGF alias Kolar Gold fields. An agreement has been signed in this regard.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X