For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காதலர் தினம் கொண்டாட எதிர்ப்பு: வாழ்த்து அட்டைகளை எரித்து போராட்டம்

By Karthikeyan
Google Oneindia Tamil News

ஹைதராபாத்: காதலர் தினம் கொண்டாடப்படுதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்வேறு அமைப்பினர் வாழ்த்து அட்டைகளை எரித்து போராட்டம் நடத்தியதால் ஹைதராபாத் நகரில் பரபரப்பு ஏற்பட்டது.

உலகம் முழுவதும் பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் காதலர் தினம் கொண்டாட்டம் நடக்கும்போது சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வன்முறையில் ஈடுபடும் சம்பவங்களும் நடப்பது வழக்கம்.

Revolt against valentines

இந்நிலையில், காதலர் தினம் கொண்டாடப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்வேறு அமைப்பினர் வாழ்த்து அட்டைகளை எரித்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தெலங்கான மாநில தலைநகர் ஹைதராபாத் நகரில் திரண்ட பஜ்ரங்தள், துர்கா வாஹினி உள்ளிட்ட அமைப்பினர் மேற்கத்திய கலாச்சாரத்தை இந்தியாவில் பின்பற்றக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்கள் எழுப்பின.

பண்பாடு, கலாச்சாரம் மிகுந்த பாரத தேசத்தில் காதலர் தினம் கொண்டாடக் கூடாது என்று குரல் எழுப்பி வாழ்த்து காதலர் தின வாழ்த்து அட்டைகளை தீயிட்டு கொலுத்தினர். பிப்ரவரி 14-ம் தேதி கொண்டாடப்படும் காதலர் தினத்தில் சிலர் வரம்பு மீறி நடந்து கொள்வதாக போராட்டத்தில் ஈடுபட்டோர் குற்றம்சாட்டினர். இதனை போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

English summary
Love shouldn't be for one day, don't celebrate Valentine's Day."
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X