For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராமர் கோயில் கட்ட நாளை பூமி பூஜை.. விழாக் கோலம் பூண்டது அயோத்தி.. சடங்குகள், சாஸ்திரங்கள் என அசத்தல்

Google Oneindia Tamil News

அயோத்தி: உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் பிறந்ததாக சொல்லப்படும் இடத்தில் கோயில் கட்டுவதற்காக பூமி பூஜை நாளை நடைபெறும் நிலையில் அங்கு நேற்று முதல் சடங்குகள் தொடங்கி இன்றும் நடைபெறுகின்றன. இதனால் அயோத்தியே விழா கோலம் பூண்டுள்ளது.

Recommended Video

    ராமர் கோயில் கட்ட நாளை பூமி பூஜை.. அயோத்தியில் அசத்தல் ஏற்பாடு

    அயோத்தியில் ராமர் கோயில் கட்டலாம் என சுப்ரீம் கோர்ட் கடந்த ஆண்டு அனுமதி அளித்தது. இதையடுத்து ஏற்கெனவே ராமர் கோயில் கட்டுவதற்கு போடப்பட்ட பிளானை விட இந்த முறை சூப்பரான ஒரு பிளானை கட்டடக் கலைஞர்கள் வடிவமைத்துள்ளார்கள்.

    Rituals begin as Ayodhya temple getting ready for Bhumi Puja

    இந்த நிலையில் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை நாளை தொடங்குகிறது. முன்னதாக இதற்கான சடங்குகள் நேற்று முதல் தொடங்கின. நாளை பூமி பூஜை போடவுள்ள நிலையில் முழு முதற்கடவுளான விநாயகருக்கு 12 அர்ச்சகர்கள் பிரார்த்தனை நடத்தினர். பின்னர் ராமர் மற்றும் சீதை சிலைகளுக்கும் பூஜைகள் நடத்தப்பட்டன.

    இன்றைய தினம் ஹனுமன் கோயிலில் பிரார்த்தனைகள் நடத்தப்படும் என தெரிகிறது. இந்த பூமி பூஜை விழாவுக்கு இதுவரை 175 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர்களில் 135 பேர் பல்வேறு ஆன்மீக குருமார்கள் ஆவர். ராமர் கோயில் கட்டும் இயக்கத்தில் முக்கியமானவரும் பாபர் மசூதி இடித்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவருமான உமா பாரதி, கொரோனா வைரஸ் பீதியால் இந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை. இந்த நிகழ்ச்சி முடிந்தவுடன் உமா பாரதி பிரார்த்தனை நடத்திக் கொள்வார்.

    Rituals begin as Ayodhya temple getting ready for Bhumi Puja

    கொரோனா அச்சுறுத்தலால் பஜனைகள், கீர்த்தனைகளை அயோத்திக்கு வெளியில் நடத்திக் கொள்ள அறக்கட்டளை கேட்டுக் கொண்டுள்ளது. சர்ச்சைக்குரிய இடம் குறித்து வழக்கு தொடுத்த இக்பால் அன்சாரியும் அழைப்பாளர்களில் ஒருவர். அயோத்தி சமூக ஆர்வலர் முகமது ஷரீப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேடையில் 5 பேருக்கு மட்டுமே அனுமதி. பிரதமர் நரேந்திர மோடி, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், அறக்கட்டளை தலைவர் நிருத்தியா கோபால் தாஸ் மகாராஜ், உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்தி பென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத்.

    அயோத்தியில் மீசை இல்லாமல் ராமர் சிலையை வைத்தால் என்னை போன்ற ராம பக்தர்களுக்கு பயனில்லை.. சம்பாஜி அயோத்தியில் மீசை இல்லாமல் ராமர் சிலையை வைத்தால் என்னை போன்ற ராம பக்தர்களுக்கு பயனில்லை.. சம்பாஜி

    135 கோடி மக்களின் சார்பாக பிரதமர் நரேந்திர மோடி கொள்வதால் யாருக்கெல்லாம் அழைப்பு விடுக்கப்பட்டதோ அவர்கள் மட்டுமே கலந்து கொள்ளுமாறு யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

    English summary
    Rituals begin in Ayodhya temple as it is getting ready for Bhumi Puja which is going to be carried out tomorrow.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X