For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிரமாண்ட பேரணி நடத்தி போட்டோஷாப் போட்டோவை டுவிட்டரில் போட்டாரா லாலு? பரபரப்பு சர்ச்சை!

பாட்னாவில் பாஜகவுக்கு எதிராக இன்று லாலுபிரசாத் யாதவ் மிக பிரமாண்ட பேரணி நடத்தினார். அது தொடர்பான போட்டோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார். ஆனால் அது, உண்மையான புகைப்படமா என்று சர்ச்சை எழுந்துள்ள

By Devarajan
Google Oneindia Tamil News

டெல்லி: பீகார் தலைநகர் பாட்னாவில் பாஜகவுக்கு எதிராக ராஷ்டிரிய ஜனதா தளம் சார்பில் பிரமாண்ட பேரணி நடத்தினார் லாலுபிரசாத் யாதவ். அதன் போட்டோக்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார். அந்த போட்டோவுக்கு பிரபல செய்தி நிறுவனம் வெளியிட்ட போட்டோவுக்கும் நிறைய வித்தியாசம் இருப்பதாக கூறப்படுகிறது.

மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக பாட்னாவில் மிகப்பெரிய பேரணி நடத்தினார் லாலு பிரசாத். இதில் மமதா பானர்ஜி, சரத் யாதவ் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.

பாஜகவை விரட்டுவோம்

பாஜகவை விரட்டுவோம்

'பாஜகவை விரட்டுவோம், நாட்டை காப்போம்' என்ற முழக்கத்தோடு, பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் லாலுவின் இந்த பிரமாண்டமான பேரணி நடந்தது. லாலுவின் இந்தப் பேரணியை எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

மமதா, அகிலேஷ்

இந்தப் பேரணியில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி, உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், ஐக்கிய ஜனதா தளத்தில் இருந்து விலகிய சரத் யாதவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பாட்னா காந்தி மைதானம் லட்சக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் நிரம்பியது. 30 லட்சம் பேர் இதில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

30 லட்சம் பேர்

30 லட்சம் பேர்

இது குறித்து தேஜஸ்வி தனது டுவிட்டர் பக்கத்தில், "பாஜகவை தோற்கடிக்க முடியாது என்று நினைப்பவர்கள் காந்தி மைதானத்துக்கு வாருங்கள். இங்கே 30 லட்சம் பேர் பாஜகவை தோற்கடிக்க காத்து இருக்கிறோம்" என பதிவிட்டுள்ளார்.

உமர் அப்துல்லா

உமர் அப்துல்லா

இதுவும் இப்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. " லாலுவின் டுவிட்டர் பக்கத்தை யார் கவனித்துக்கொள்கிறார்கள்? என்று கேள்வி எழுப்பியுள்ள ஆம் ஆத்மி கட்சி தலைவர் அது தொடர்பாக டுவிட்டரில் பதிவும் போட்டுள்ளார். ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா வெளியிட்டுள்ள பதிவில், லாலுவின் டுவிட்டர் பக்கத்தில் உள்ள போட்டோவுக்கு ஏ என் ஐ போட்டோவுக்கும் வித்தியாசம் உள்ளதே என்று பதிவிட்டுள்ளார்.

English summary
RJD supremo and the news agency ANI were published photos, There were striking differences between the photos tweeted.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X