For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இது என்ன புதுசா இருக்கு.. சுடசுட பரிமாறப்படும் ஐஸ்கீரிம் தோசை.. காரசாரமாக விவாதித்த நெட்டிசன்கள்!

Google Oneindia Tamil News

அகமதாபாத்: தோசைகளில் வித விதமான தோசைகளை கேள்வி பட்டு இருப்போம். ஆனியன் தோசை தொடங்கி, நெய்தோசை, மசால் தோசை என வித விதமான தோசைகளை போட்டு நமது ஊர் ஓட்டல்களில் மாஸ்டர்கள் அசத்தி விடுவார்கள். இப்போது புதிதாக ஐஸ்கீரிம் தோசை ஒன்று குஜராத்தில் உள்ள சாலையோர உணவகத்தில் போடப்பட்டு வருகிறது. இது குறித்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

தோசைகளில் வித விதமான தோசைகளை கேள்விப்பட்டு இருப்போம். ஆனியன் தோசை தொடங்கி, நெய்தோசை, மசால் தோசை என வித விதமான தோசைகளை போட்டு நமது ஊர் ஓட்டல்களில் மாஸ்டர்கள் அசத்தி விடுவார்கள்.

ஓட்டல் வாடிக்கையாளர்கள் ருசியாய் ஒரு பிடி பிடித்து வருவார்கள். தென்னியாந்தியாவின் மிகவும் பிரபலமான உணவு வகையில் தோசையும் மிக முக்கிய இடம் பெறும்.

இந்த பொறப்பு தான்! 7 வருடம் முதலிடத்தில் ’பிரியாணி’! சறுக்கிய மசாலா தோசை! டஃப் கொடுக்கும் சமோசா! இந்த பொறப்பு தான்! 7 வருடம் முதலிடத்தில் ’பிரியாணி’! சறுக்கிய மசாலா தோசை! டஃப் கொடுக்கும் சமோசா!

தோசைகள் பலவிதம்

தோசைகள் பலவிதம்

தமிழ்நாடு போன்ற தென் மாநிலங்களுக்கு வரும் வெளிநாட்டு தலைவர்கள் கூட தோசை வகைகளை சாப்பிட்டு அதன் ருசியை சிலாகித்து பேசுவதுண்டு.. இப்படி தோசையில் வித விதமான தோசைகளை அவ்வப்போது ஓட்டல் மாஸ்டர்கள் முயற்சித்து பார்ப்பதுண்டு. தோசையில் காதலை வெளிப்படுத்தும் விதமாக ஹார்ட்டின் தோசை போடுவது போன்றவற்றை கூட இணையத்தில் அடிக்கடி பார்த்து இருப்போம்.. தோசையில் எத்தனையோ வெரைட்டிகளை சாப்பிட்டு பார்த்தும் கேள்வி பட்டு இருப்போம். ஆனால் ஐஸ்கிரீம் தோசையை கேள்வி பட்டு இருக்கீர்களா..

ஐஸ்கிரீம் தோசை வீடியோ

ஐஸ்கிரீம் தோசை வீடியோ

என்னது ஐஸ்கிரீம் தோசையா.. என்று படிக்கும் போதே புருவத்தை உயர்த்தி பர்ப்பதை அறிய முடிகிறது. ஆம் உண்மைதான்.. குஜராத்தில் உள்ள தெருவோர கையேந்தி பவனில் தான் ஐஸ்கிரீம் தோசை போடப்படுகிறது. ஐஸ்கிரீம் தோசையை பார்த்த நெட்டிசன் ஒருவர் அதை வீடியோ எடுத்து பகிர்ந்து உள்ளார். அந்த வீடியோவில், "சூடான கல்லில் தோசை மாவு ஊற்றப்படுகிறது. தோசை மாவு மேலே வாடிக்கையாளர்கள் விரும்பும் ஐஸ்கிரீம் பிளேவர்களை போடுகிறார்.

சைட் டிஷும் ஐஸ்கிரீம்களே

சைட் டிஷும் ஐஸ்கிரீம்களே

அதன்பிறகு ஜாம் ஊற்றி.. சாக்கலேட் சிரப்பையும் தோசை மேலே ஊற்றி அழகாக மடித்து எடுத்து வாடிக்கையாளர்களுக்கு சுடச்சுட பரிமாறுகிறார். தோசை என்றாலே அதன் முறுகலும் காரசார சட்டினி வகையும்தான் நமக்கு நியாபகத்திற்கு வரும். ஆனால், இங்கு தோசைக்கு சைட் டிஷாகா ஐஸ்கிரீம்களே வைக்கப்பட்டுள்ளன. இணையத்தில் இந்த வீடியோ வேகமாக பரவி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் என்ன இது.. மொத்த தோசையையும் கெடுத்து வச்சிரூங்களே என்ற ரீதியில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

நெட்டிசன்கள் கருத்து

நெட்டிசன்கள் கருத்து

நெட்டிசன் ஒருவர் கூறுகையில் குஜராத்தில் அருமையான ருசியில் இட்லி, வடைகள் கிடைக்கின்றன. ஆனால், புதுமை என்ற பெயரில் இது பயனற்ற முயற்சி என்று பதிவிட்டுள்ளார். நெட்டிசன்கள் பலரும் கண்டிப்பாக இது ருசியாக இருக்காது நான் முயற்சித்து பார்க்க போவது இல்லை என்றே கருத்துக்களை பதிவிட்டு இருக்கின்றனர். அதேவேளையில் ஒரு சில நெட்டிசன்கள் சாக்கலேட் தோசாவை பல இடங்களில் பார்த்து இருப்பதாகவும் பதிவிட்டுள்ளனர். குழந்தைகள் விரும்பி இந்த தோசையை சாப்பிடுவதுண்டு. எனவே தேவையின்றி இதை வெறுக்காதீர்கள். உங்களுக்கு கிளாசிக் தோசைதான் பிடிக்கும் என்றால் தாராளமாக சாப்பிடுங்கள். ஆனால், ருசி பார்க்காமல் வெறுக்காதீர்கள் என்றும் சிலர் பதிவிட்டு வருகின்றனர்.

English summary
We have heard about different types of dosas. Starting with Onion Dosa, the masters in our local restaurants will surprise you by making different types of Dosa like Neidosa, Masal Dosa. Now a new ice cream dosa is being served at a roadside restaurant in Gujarat. A video of this is going viral on the internet.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X