For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரோஹித் வேமூலா தலித் அல்ல.. சொல்வது தெலுங்கானா போலீஸ்

ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் தற்கொலை செய்து கொண்ட ரோஹித் வேமூலா தலித் அல்ல என்று தெலுங்கானா போலீஸார் கூறியுள்ளனர்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

ஹைதராபாத்: ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் தற்கொலை செய்து கொண்ட ரோஹித் வேமூலா தலித் அல்ல என்று தெலுங்கானா போலீஸுக்கு ஆந்திர போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது.

மாணவர் ரோஹித் வேமுலா மீது பல்கலைக்கழக நிர்வாகம் சஸ்பென்ட் நடவடிக்கை எடுத்ததால் அவர் 2016 - ஆம் ஆண்டு ஜனவரி மாதம் விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்டார். இதனால் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 Rohit Vemula isn’t Dalit, say Telangana cops

வேமுலாவின் தற்கொலை சம்பவத்தை விசாரணை நடத்த அலகாபாத் உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏகே ரூபன்வால் தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. பல்கலைக்கழகத்தில் நடந்த சம்பவங்கள், தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க மத்திய மனிதவளத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியது.

தற்கொலை செய்து கொண்ட தலித் வேமூலா தலித் என்பதால் அவரது தற்கொலைக்கு காரணமாக இருந்ததாக மத்திய அமைச்சர் பண்டாகு தத்தாத்ரேயா, ஹைதராபாத் பல்கலை துணை வேந்தர் அப்பா ராவ் உள்ளிட்டோர் மீது எஸ்சி- எஸ்டி பிரிவினருக்கு எதிராக வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தது.

இந்நிலையில் ரோஹித் வேமூலாவின் சொந்த மாவட்டம் குண்டூர் என்பதால் ஆந்திர போலீஸார் அவரது ஜாதி குறித்த தகவலை தெலுங்கானா போலீஸிடம் விசாரித்தனர். அப்போது ரோஹித் வேமூலாவின் ஜாதி குறித்த அறிக்கையை தெலுங்கானா போலீஸிடம் கொடுத்தது.

அந்த அறிக்கை குறித்து சைராபாத் போலீஸ் ஆணையர் சந்தீப் சண்டில்யா கூறுகையில், தற்கொலை செய்து கொண்ட ரோஹித் வேமூலா தலித் அல்ல என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளதாக தெரிவித்தார்.

English summary
Hyderabad police department has received a report from the revenue officials of Guntur district that Rohit Vemula did not belong to a Scheduled Caste, that is he was not dalit.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X