For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பி.எஃப். வரியால் மிடில் கிளாஸ் மக்களின் வயிற்றில் உதைத்த அரசு: ட்விட்டரில் குமுறும் மக்கள்

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியை திரும்பப் பெறும்போது 60 சதவீத தொகைக்கு வரி விதிக்கப்படுவதை எதிர்த்து மக்கள் ட்விட்டரில் குரல் கொடுத்து வருவதால் #RollBackEPF என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது.

நடப்பாண்டில் ஏப்ரல் 1ம் தேதிக்கு மேல் பிடித்தம் செய்யப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியை(பிஎஃப்) திரும்பப் பெறுகையில் 60 சதவீத தொகைக்கு வருமான வரி விதிக்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பி.எஃப். மீதான வரியை திரும்பப் பெறுமாறு கூறி மக்கள் ட்வீட் செய்து வருகிறார்கள். இதனால் #RollBackEPF என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் தேசிய அளவில் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது.

நடுத்தர வர்க்கம்

வேலைவாய்ப்பு மற்றும் விலைவாசியை குறைப்பதாக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிவிட்டு பாஜக தற்போது நடுத்தர வர்க்கத்தின் சேமிப்பிலும் கை வைக்கிறது #Disgrace #RollBackEPF என்கிறார் விகாஷ் புரோகித்.

சேமிப்பு

கடுமையாக உழைக்கும் நடுத்தர வர்க்கத்தினர் சேமிப்பதே கடினம். பி.எஃப். அவர்களுக்கு நிச்சயம் சேமிப்பே. அதற்கும் அரசு வரி விதிப்பதா? #RollBackEPF நடுத்தர வர்க்கத்திற்கு எதிரான மோடி என்று ரவி ட்வீட் செய்துள்ளார்.

வரி

என்ன ஒரு உதவாத வரி.... பகுத்தறிவற்ற, லாஜிக்கே இல்லாதது. வரி விதிப்பை திரும்பப் பெறுங்கள் #RollbackEPF என்று சுனில் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

உதை

பி.எஃப். பணத்தின் மீது வரி விதித்துள்ளது நடுத்தர மக்களின் வயிற்றில் ஓங்கிவிடப்பட்ட உதை. #RollbackEPF என்கிறார் ரஜப் அலி.

தொட்டால்

பி.எஃப். தொகையில் வட்டியை தொட வேண்டும் என்று கூட நினைக்காதீர்கள். இந்தியாவின் அரசியல் வரைபடத்தில் இருந்து காணாமல் போய்விடுவீர்கள் ஜேட்லி, ஜெயந்த் சின்ஹா #RollBackEPF என்று குமுறியுள்ளார் ஸ்ட்ரேஞ்சர்.

சம்பளம்

வருமானத்திற்கு வரி, ஏதாவது வாங்கினால் வாட்/ சேவை வரி கட்டுகிறோம். இதில் நாம் சேமிப்பதற்கும் வரி செலுத்த வேண்டும். #RollBackEPF என நாகராஜ் பூஜாரி தெரிவித்துள்ளார்.

English summary
As many are tweeting asking the centre to roll back tax on EPF withdrawal, #RollbackEPF is trending on twitter.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X