For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வங்கிகளிடமிருந்து பல கோடி ரூபாய்களை விக்ரம் கோத்தாரி மோசடி செய்தது எப்படி?

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    வெளிநாடு ஓடவில்லை : விக்ரம் கோதாரி- வீடியோ

    டெல்லி: ரோட்டோமேக் நிறுவனத்தின் அதிபர் விக்ரம் கோத்தாரி, எப்படியெல்லாம் மோசடி செய்து வங்கியை ஏமாற்றினார் என்ற தகவலை சிபிஐ கண்டுபிடித்துள்ளது.

    வைரவியாபாரி நீரவ் மோடியை போலவே, விக்ரம் கோத்தாரியும் வங்கி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. மோசடியின் மதிப்பு ரூ.800 கோடி என்றும் பிறகு அது ரூ.2,919 கோடி என்றும் கண்டுபிடிக்கப்பட்டது.

    Rotomac fraud: Credits were diverted to offshore companies and remitted back in Kanpur

    இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்தி அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் ரெய்டு நடத்தியிருந்தது. இதன்பிறகு, விக்ரம் கோத்தாரி கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    வங்கிகளில் இருந்து பொருட்களை ஏற்றுமதி செய்ய கோத்தாரி வாங்கிய பணத்தை செலவிடவில்லை என்று சிபிஐ தெரிவிக்கிறது. வங்கிகளிடமிருந்து அட்வான்சாக பணம் பெற கோத்தாரி நிறுவனம் போலி ஆவணங்களை பயன்படுத்தியுள்ளதாக சிபிஐ தெரிவிக்கிறது.

    போலி கம்பெனிகள் பெயரில் பணத்தை பெற்று அதை தனது நிறுவனத்திற்கே திருப்பிவிட்டு, விக்ரம் கோத்தாரி நிறுவனம் மோசடி செய்துள்ளது.

    போலி பில்களின் ஜெராக்ஸ் காப்பிகளைத்தான் வங்கிகளுக்கு கோத்தாரி கொடுத்துள்ளார். பொருள் வாங்கியதற்கான இன்சூரன்ஸ்சையும் அவர் சமர்ப்பிக்கவில்லை. இந்த வழக்கை அமலாக்கத்துறையும் இணைந்து விசாரணை நடத்தி வருகிறது.

    English summary
    The Central Bureau of Investigation probing the Rotomac Pens fraud case has learnt that the credits that were sanctioned for any particular export order was diverted to an offshore company. The money was later remitted back into the Kanpur-based company without executing an export order, CBI officials have learnt.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X