For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பேனா மட்டும் இல்லை.. என்னிடம் 21 வகை நோய்களும் இருக்கு.. பீதி கிளப்பிய விக்ரம் கோத்தாரி !

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    வெளிநாடு ஓடவில்லை : விக்ரம் கோதாரி- வீடியோ

    டெல்லி: ரோட்டோமேக் பேனா நிறுவன அதிபர் விக்ரம் கோத்தாரி தனக்கு 21 வகையான நோய்கள் இருப்பதாக சிபிஐ நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

    பேங்க் ஆப் பரோடா உட்பட, பல்வேறு வங்கிகளில் ரூ.3,695 கோடி வரை, மோசடி செய்ததாக, சிபிஐயால் கைது செய்யப்பட்டுள்ளவர் விக்ரம் கோத்தாரி. இவரை 11 நாள் விசாரணைக்கு எடுத்துள்ளது சிபிஐ.

    இந்த நிலையில் சிபிஐ நீதிமன்றத்தில் விக்ரம் கோத்தாரி தாக்கல் செய்த மனுவில், தனக்கு 21 வகையான நோய்கள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

     உணவு, மருத்துவம்

    உணவு, மருத்துவம்

    இத்தனை நோய்கள் இருப்பதால் வீட்டில் இருந்து உணவு வழங்க தனக்கு சிறப்பு அனுமதி வழங்க வேண்டும், அடிக்கடி மருத்துவ பரிசோதனைகள் செய்ய வேண்டும் என்று, விக்ரம் கோத்தாரி அந்த மனுவில் கோரியுள்ளார்.

     நீரிழிவு நோய்

    நீரிழிவு நோய்

    70 வயதாகும் கோத்தாரி கடந்த 20 வருடங்களாக நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வருகிறார். அந்த பாதிப்பு அவரது கண்கள் மற்றும் கிட்னியையும் சேதப்படுத்தியுள்ளதாம்.

     பல நோய்கள்

    பல நோய்கள்

    ரத்த அழுத்தத்தில் மாறுபாடு, தண்டுவடத்தில் காயம், மூட்டு வலி, நம்பு பிரச்சினை, அனீமியா உள்ளிட்ட 21 வகை நோய்கள் அவருக்கு இருப்பதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

     சிறப்பு கவனம்

    சிறப்பு கவனம்

    சிபிஐ நீதிமன்றம் கோத்தாரியின் மனு மற்றும் டாக்டர் சான்றுகளை ஏற்றுக்கொண்டு, அவருக்கு சிறப்பு மருத்துவ கவனம் வழங்க உத்தரவிட்டுள்ளது. வழக்கில் ஆஜரான கோத்தாரியின் வக்கீல், 4 நாட்களாக சிபிஐ விக்ரம் கோத்தாரியை சட்ட விரோத காவலில் வைத்திருந்தது. அப்போது ஏற்பட்ட மன நெருக்கடிகள்தான் அவரை இந்த நிலைக்கு தள்ளிவிட்டது என்று குற்றம்சாட்டியிருந்தார்.

    English summary
    In an application before a Central Bureau of Investigation court, Rotomac owner Vikram Kothari sought permission to get home-cooked food and routine medical check.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X