For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அம்மா, அப்பா கண்டிப்பு + கண்காணிப்பு... பேஸ்புக்கில் இருந்து வெளியேறிய 30 லட்சம் இளசுகள்!

Google Oneindia Tamil News

டெல்லி: பெற்றோரின் கண்டிப்பு, கிடுக்கிப் பிடி கண்காணிப்பு உள்ளிட்ட காராணங்களால் கடந்தாண்டு மட்டும் சுமார் 30 லட்சம் டீன் ஏஜ் வயதினர் பேஸ்புக் வலைதள பயன்பாட்டிலிருந்து விலகியுள்ளனராம்.

ஆறறிவு கொண்ட மனிதனின் ஏழாவது அறிவாக மாறிப் போன செல்போனால் இப்போது உலகமே கைக்குள் அடங்கி விடுகிறது. இதன் காரணமாக பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்கள் மற்றவர்களோடு பயனாளிகளை எளிதாக தொடர்பு கொள்ளவும், பயனாளிகளின் கருத்துச் சுதந்திரத்திற்கு வடிகாலாகவும் அமைந்து வருகிறது.

ஆனால், இது போன்ற சமூக வலைதளங்களைப் பயன்படுத்தும் பதின்பருவத்தினர், தவறான எண்ணச் சிதைவுகளுக்கு ஆளாகி வாழ்க்கையையே தொலைக்கும் நிகழ்வுகளும் அவ்வப்போது நிகழத் தான் செய்கின்றன.

இந்நிலையில், பெற்றோரின் கண்டிப்பு உள்ளிட்ட காரணங்களால் கடந்தாண்டில் மட்டும் சுமார் 30 லட்சம் பதின்பருவத்தினர் பேஸ்புக்கில் இருந்து வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆய்வின் மூலம்...

ஆய்வின் மூலம்...

‘டிஜிட்டல் கன்சல்டன்சி ஆஸ்டிரேடஜி லேப்' வெளியிட்ட ஆய்வறிக்கையின் மூலம் இது உறுதி செய்யப் பட்டுள்ளது. இதன் மூலம் கடந்த ஆண்டில் பெற்றோருக்கு பயந்து அல்லது பெற்றோர்ககளின் கண்காணிப்பையடுத்து பேஸ்புக் சமூக வலைதள பயன்பாட்டாளர்களில் கிட்டத்தட்ட 30 லட்சம் கல்லூரி மாணவ, மாணவியர் தங்கள் கணக்குகளை நீக்கியுள்ளது தெரிய வந்துள்ளது.

கணக்கு வைத்துள்ள மாணவ மாணவியர்

கணக்கு வைத்துள்ள மாணவ மாணவியர்

அண்மையில் இந்த ஆய்வகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் பேஸ்புக் சமூக வலைதளத்தின் "அட்வர்டைசிங் பிளாட்பார்மில்" உள்ள டேட்டாக்களை ஆய்வு செய்தனர். அதன்மூலம், தற்போது 4.29 கோடி உயர் நிலைப்பள்ளி மாணவர்களும், ஏழு கோடி கல்லூரி மாணவ, மாணவியரும் பேஸ்புக் வலைதளத்தில் கணக்குகள் வைத்துள்ளதாகக் கணக்கிடப் பட்டுள்ளது.

அமெரிக்காவில்தான் அதிகம்

அமெரிக்காவில்தான் அதிகம்

பேஸ்புக்கிலிருந்து விலகியோரின் எண்ணிக்கையைப் பார்த்தால் அமெரிக்காவில் மட்டும் 25 சதவீதம் பேர் வெளியேறியுள்ளனர். அதிலும் பள்ளி மாணவ மாணவியர்தான் பெருமளவில் போயுள்ளனர். கல்லூரிக்கார்கள் இன்னும் கிளம்பாமல் உள்ளனர்.

இங்க போயிருவோம்ல

இங்க போயிருவோம்ல

ஆனபோதும், பேஸ்புக்கில் இருந்து வெளியேறிய கல்லூரி மாணவ, மாணவியர், தற்போது "வாட்ஸ்அப்", "டுவிட்டர்" மற்றும் "ஸ்நாப்ஷாட்" போன்ற வலைதளங்களில் கணக்குகளைத் துவக்கி உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெற்றோர்களின் கண்காணிப்பு....

பெற்றோர்களின் கண்காணிப்பு....

இதுகுறித்து கல்லூரி மாணவ, மாணவியரிடம் நடத்திய ஆய்வில் "தங்களுடைய பெற்றோரும் பேஸ்புக் வலைதளத்தில் கணக்குகளை வைத்திருப்பதால் தங்களின் அனைத்து செயல்பாடுகளையும் அவர்கள் அறிந்து கொள்வதால்.ஏனைய வலைதளங்களில் இதே போன்ற கணக்குகளை துவக்கி தனிப்பட்ட வாழ்க்கை முதல் அனைத்தையும் பகிர்ந்து கொள்கிறோம்" என்று தெரிவித்துள்ளனராம்.

உண்மைதான்....

உண்மைதான்....

பேஸ்புக் வலைதளத்தின் பயன்பாட்டாளர்கள் குறைந்துள்ளதை ஒப்புக்கொண்டுள்ள தலைமை நிதி அதிகாரி டேவிட் எபர்ஸ்மேன், நிறுவனத்தின் பங்கு விற்பனை 15 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது எனக் கூறியுள்ளார்.

English summary
A Recent report on Facebook’s Social Advertising platform to get a refreshed snapshot of the same data points to see what exactly has happened over time and to look at the numbers behind many recent claims: teenagers are leaving by the millions.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X