For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அதே நேரம், அதே இடம்... களத்தில் சந்திப்போம்... பாஜக.,வுடன் மம்தா மோதல்

Google Oneindia Tamil News

கொல்கத்தா : மேற்குவங்கத்தில் நாளை பாஜக நடத்த உள்ள ரத யாத்திரையே சர்ச்சையாக உள்ள நிலையில், அதே நேரம், அதே இடத்தில் தானும் மோட்டர் சைக்கிள் பேரணியை துவக்க உள்ளதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் அறிவித்துள்ளார்.

மேற்குவங்க மாநிலத்தில் வரும் ஜூன் மாதம் சட்டசபை தேர்தல் நடக்க நிலையில், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து முக்கிய தலைவர்கள் விலகி, பாஜக.,வில் இணைந்து வருகின்றனர். இதனால் பாஜக - மம்தா இடையேயான மோதல் தீவிரமடைந்து வருகிறது.

 Row Over BJP Rath Yatra, Trinamool Rally In Bengal, Same Place, Same Time

இந்நிலையில் மேற்குவங்கத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் நாடியா மாவட்டத்தில் பாஜக ரதயாத்திரை நடத்த போவதாகவும், இதனை அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கொடியசைத்து துவக்கி வைக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த யத ராத்திரைக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் பாஜக ரத யாத்திரை நடத்துவதாக அறிவித்துள்ள அதே நேரம், அதே இடத்தில் 2 நாள் ஆயிரக்கணக்கானவர்களை திரட்டி மோட்டார் சைக்கிள் பேரணி நடத்த போவதாக முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

இது பற்றி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் பதிவிட்ட பக்கத்தில் பதிவிடப்பட்ட தகவலில், எந்த யாத்திரைக்கும் மேற்குவங்க அரசு அனுமதி மறுக்கவில்லை. மேற்குவங்க பாஜக.,வின் குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை. யாத்திரைக்கு மேற்கு வங்க அரசு மறுத்ததற்கான ஆதாரத்தை பாஜக காட்ட வேண்டும். எங்கள் மீது பழி சுமத்த பாஜக.,வின் முயற்சி இது.

தலைமை செயலாளரிடம் தான் பாஜக சார்பில் அனுமதி கேட்கப்பட்டது. அவர்கள் உள்ளூர் நிர்வாகிகளை அணுகும்படி கூறி உள்ளனர். இது தொடர்பாக ஐகோர்ட்டிலும் அவர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர். இதில் திரிணாமுல் காங்கிரசிற்கு எந்த தொடர்பும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக.,வுக்கு அனுமதி மறுத்தது நாய்டா மாவட்ட போலீசார். ஆனால் அவர்களிடமே பாஜக தலைவர் நட்டாவிற்கு அளிக்கப்பட்டுள்ள இசட் பிளஸ் பாதுகாப்பு விபரங்களை தர வேண்டும் என பாஜக கேட்டுள்ளது.

ரத யாத்திரை செல்லும் பாதை, எங்கெல்லாம் நிறுத்தப்படுகிறது, அதற்கான ஏற்பாடுகள் குறித்த விபரங்களை தர வேண்டும் எனவும், கோவிட் 19 பாதுகாப்பு விதிகளை கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர். பாஜக மாநில தலைவர் பிரதாப் பானர்ஜி கூறுகையில், நாங்கள் யத ராத்திரைக்கு அனுமதி கேட்கவேயில்லை. அரசியல் நிகழ்ச்சிக்கு மட்டுமே அனுமதி கேட்டுள்ளோம் என தெரிவித்துள்ளார்.

ஒரே நேரத்தில் ரத யாத்திரையும், மோட்டார் சைக்கிள் பேரணியும் நடக்க உள்ளதால் நாடியா மாவட்டத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. போலீஸ் பாதுகாப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

English summary
The Trinamool Congress will hold a motorcycle rally on February 6 and 7 in Nadia district, at the same time as the BJP's rath yatra
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X