For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிரஸ் மீட் கொடுத்த மூத்த நீதிபதிகள் மீது நடவடிக்கை எடுக்க தலைமை நீதிபதியிடம் வலியுறுத்தல்!

By Mathi
Google Oneindia Tamil News

Recommended Video

    உச்ச நீதிமன்றத்தில் நிர்வாகம் சரி இல்லை... உச்சநீதிமன்ற நீதிபதிகள்- வீடியோ

    டெல்லி: செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மூத்த நீதிபதி செல்லமேஸ்வர் உட்பட 4 பேர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பெஞ்சிடம் மூத்த வழக்கறிஞர் லுத்ரா முறையீடு செய்தார்.

    நீதிபதிகள் செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகோய், மதன் லோகூர், குரியன் ஜோசப் ஆகியோர் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். இது தொடர்பாக பகிரங்கமாக செய்தியாளர்களிடம் பேசினர்.

    சர்ச்சை நீடிப்பு

    சர்ச்சை நீடிப்பு

    நாட்டின் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையிலான அசாதாரண சூழலாக இது பார்க்கப்பட்டது. இந்த சர்ச்சை இன்னமும் நீடித்து வருகிறது.

    பரபர உச்சநீதிமன்றம்

    பரபர உச்சநீதிமன்றம்

    இந்நிலையில் இன்று உச்சநீதிமன்றம் பரபரப்பாக காணப்பட்டது. உச்சநீதிமன்றப் பணிகள் இன்று காலை 10 நிமிடங்கள் தாமதமாக தொடங்கின.

    10 நிமிடம் தாமதம்

    10 நிமிடம் தாமதம்

    பேட்டியளித்த நீதிபதிகள் 4 பேரும் இன்று வழக்கம் போல தங்களது பணிகளை காலை 10.40 மணிக்கு மேற்கொண்டனர். இன்று காலை உச்சநீதிமன்ற பணிகள் தொடங்கிய நிலையில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பெஞ்சிடம் மூத்த வழக்கறிஞர் லுத்ரா முறையீடு ஒன்றை செய்தார்.

    புன்னகைத்த நீதிபதி

    புன்னகைத்த நீதிபதி

    நீதித்துறையை அழிக்க நடக்கும் சதிதான் நீதிபதிகளின் செய்தியாளர்கள் சந்திப்பு; ஆகையால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். லுத்ராவின் கருத்தை உன்னிப்பாக தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா கேட்டுக் கொண்டார். ஆனால் கருத்து எதுவும் தெரிவிக்காமல் புன்னகையை மட்டும் வெளிப்படுத்தினார் தீபக் மிஸ்ரா.

    English summary
    Supreme Court advocate RP Luthra has raised the judges issue before the Chief Justice of India's bench on Monday.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X