For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அரசியல் கலாட்டாவுக்கு இடையே ராஜஸ்தானில் பரபரப்பு.. 2 கார்களில் ரூ.1.25 கோடி பணம் பறிமுதல்

Google Oneindia Tamil News

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் சிறப்பு செயல்பாட்டுக் குழு (எஸ்ஓஜி) மூன்று நபர்கள் வசமிருந்து ரூ .1.25 கோடி ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்தது.

ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் இரண்டு கார்களில், இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 3 பேர் அந்த கார்களில் இருந்துள்ளனர். எஸ்ஓஜி மற்றும் மாநில பயங்கரவாத தடுப்புப் பிரிவு நடத்திய கூட்டு ஆபரேஷனில் இந்த பணம் சிக்கியுள்ளது.

Rs 1.25 Cr from 2 Cars in Udaipur

இவ்வளவு பெரிய தொகை ஏன் கார்களில் கொண்டு செல்லப்பட்டது என்பது குறித்து, உடனடியாகத் தெரியவில்லை. யாருடைய பணம் இது என்பது பற்றி விசாரணை துவங்கியுள்ளது.

ராஜஸ்தானில், முதல்வர் அசோக் கெலாட் மற்றும் முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் இடையே ஏற்பட்ட மோதலால், ஆட்சிக்கு சிக்கல் எழுந்துள்ளது.

சச்சின் பைலட், அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மீது சபாநாயகர் ஜூலை 24 வரை நடவடிக்கை எடுக்க ஹைகோர்ட் தடைசச்சின் பைலட், அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மீது சபாநாயகர் ஜூலை 24 வரை நடவடிக்கை எடுக்க ஹைகோர்ட் தடை

இந்த நிலையில், மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் மற்றும் சச்சின் பைலட்டின் ஆதரவாளரான பன்வர் லால் சர்மா மற்றும் சஞ்சய் ஜெயின் ஆகியோர், அசோக் கெலாட் ஆட்சியைக் கவிழ்க்க பேரம் பேசியதாக ஒரு ஆடியோவை காங்கிரஸ் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.

எனவே, கஜேந்திர சிங் ஷெகாவத், உட்பட 3 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டன. இந்த நிலையில், ராஜஸ்தானில் 1.25 கோடி பணம் கைப்பற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
In an operation by Special Operations Group (SOG) in Udaipur, Rs 1.25 Crores were recovered from the possession of three people in two cars. They are being questioned regarding the money: ATS and SOG, Rajasthan
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X