For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரூ.15 லட்சம் கிடைச்சிருச்சு... காங்., கூட்டத்தில் மோடி பற்றி பெருமிதமாக பேசிய இளைஞர்

Google Oneindia Tamil News

போபால்: காங்கிரஸ் கட்சி கூட்டத்தில், மோடி குறித்து பெருமிதமாக பேசிய இளைஞரை, பாஜகவினர் அழைத்து கௌரவித்துள்ள சம்பவம் நடந்துள்ளது.

மத்திய பிரதேச மாநில முதல்வராக இரண்டு முறை பதவி வகித்தவர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான திக் விஜயசிங். மத்திய அமைச்சராகவும், எம்.எல்.ஏ, எம்.பி என பல முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இவர் நடைபெற்று வரும் நாடாளுமன்ற தேர்தலில் போபால் தொகுதியில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து சாத்வி பிரக்யா சிங் தாகூரை பாஜக நிறுத்தியுள்ளதால் கடுமையான போட்டியை இத்தொகுதி எதிர்நோக்கியுள்ளது.

தேர்தல் நேரமா இருக்கு... மம்தா வாழ்க்கை வரலாற்று படத்தின் டிரைலரை நீக்குக.. தேர்தல் ஆணையம்தேர்தல் நேரமா இருக்கு... மம்தா வாழ்க்கை வரலாற்று படத்தின் டிரைலரை நீக்குக.. தேர்தல் ஆணையம்

கை தூக்கிய இளைஞர்

கை தூக்கிய இளைஞர்

இந்த நிலையில் நேற்று முன்தினம், போபாலில் நடைபெற்ற காங்கிரஸ் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் திக் விஜயசிங் பேசினார். அப்போது, அங்கு திரண்டிருந்தவர்கள் மத்தியில் பிரதமர் மோடி வாக்குறுதியளித்த படி 15 லட்ச ரூபாயை யார் யாரெல்லாம் தங்களது வங்கிக் கணக்கில் பெற்றுள்ளீர்கள். அவர்கள் கை தூக்குங்கள் என்றார். அப்போது இளைஞர் ஒருவர் கை தூக்கினார் அவரை பார்த்து கூட்டத்தினர் குழம்பினர்.

மோடி குறித்து பெருமிதம்

மோடி குறித்து பெருமிதம்

இதனையடுத்து, இளைஞரை, மேடைக்கு அழைத்த திக் விஜய சிங், நீங்கள் 15 லட்சத்தை வாங்கி விட்டீர்களா? என்று கேள்வி எழுப்பினர். உங்களது அனுபவத்தை விளக்குங்கள் என கூறினார். அப்போது பேசிய அந்த இளைஞர் பிரதமர் மோடி, சர்ஜிகல் தாக்குதல்களை நடத்தி தீவிரவாதிகளை அழித்தார் என்று மைக்கில் பேசினார்.

வைரல் வீடியோ

வைரல் வீடியோ

இதனை சற்றும் எதிர்பாராத திக் விஜய சிங் அந்த இளைஞரை மேடையில் இருந்து இறக்கி விட்டார். இந்த நிகழ்வு சமூகவலைத்தளங்களில் வைரலாகி வந்தது. பின்னர், அந்த இளைஞர் பெயர் அமித் மாலி என தெரியவந்தது. பாஜக தொண்டர்கள், அவருக்கு தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

பாஜக கௌரவம்

இந்தநிலையில், அமித் மாலியை, மத்திய பிரதேச பாஜக தலைவர்கள் அழைத்து, பூங்கொத்து கொடுத்து கௌரவப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து பேசிய அமித் மாலி, தான் மோடியை பற்றி பேசிய பிறகு, மேடையில் இருந்து இறக்கிவிடப்பட்டேன். இருப்பினும், யாரும், தன்னிடம் தவறாக நடந்து கொள்ளவில்லை என்றார்.

English summary
Amit Mali: He (Digvijaya Singh) had asked who all got 15 lakhs in their accounts, he made me step down from the stage. Nobody misbehaved with me afterwards.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X