For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பதன்கோட் தாக்குதலில் வீரமரணம் அடைந்த பஞ்சாப் வீரர்கள் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதி, அரசு வேலை

By Veera Kumar
Google Oneindia Tamil News

சண்டிகர்: பஞ்சாப் மாநிலம், பதான்கோட் விமானப் படை தளத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் வீரமரணம் அடைந்த பஞ்சாப்பைச் சேர்ந்த இரண்டு வீரர்களின் குடும்பத்திற்கு தலா ரூபாய் 25 லட்சம் வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் பிரகாஷ்சிங் பாதல் தெரிவித்துள்ளார்.

Rs 25 lakh, job each for kin of Punjab martyrs

"நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த இவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அவர்களது குடும்பத்திற்கு தலா ரூபாய் 25 லட்சம் வழங்கப்படும். வீரர்களின் இரண்டு பேரின் குடும்பத்திற்கு தகுதியுள்ள ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும். பஞ்சாப் தவிர்த்து எந்த மாநில வீரராக இருந்தாலும், அவர்கள் குடும்பங்களுக்கும் தேவைப்படும் உதவிகள் செய்யப்படும்" என்றும் பாதல் தெரிவித்துள்ளார்.

வீரமரணம் அடைந்தவர்கள் போரில் இறந்ததாக கருதப்பட்டு, அவர்கள் குடும்பத்திற்கு அதற்கு உரிய உயர் சலுகைகள் வழங்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Punjab Chief Minister Parkash Singh Badal on Tuesday announced financial assistance of Rs. 25 lakh and government job each for next of kin of two martyrs from the state - Honorary Captain Fateh Singh and Havildar Kulwant Singh.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X