For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஒரு மாநிலத்தின் பட்ஜெட்டில் பாதி மதிப்புக்கு நிதி முறைகேடு.. நீரவ் மோடி பாணியில் ராகேஷ் ஷர்மா

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    நீரவ் மோடி போல மற்றொரு மோசடி- வீடியோ

    சிம்லா: நீரவ் மோடி பற்றிய சர்ச்சைகளே ஓயாத நிலையில், ஹிமாச்சல பிரதேசத்தில் ரூ.3000 கோடி அளவுக்கான வரி ஏய்ப்பு விவகாரம் வெளியாகி அதிர்ச்சியை அதிகரித்துள்ளது.

    noble alloys உற்பத்தி பிரிவு என்ற பெயரில், சிர்மார் மாவட்டத்தில் 2009ல் ராகேஷ் ஷர்மா என்பவரால் தொடங்கப்பட்ட நிறுவனம்தான் விற்பனை வரி, வருமான வரி மற்றும் கலால் வரி என பல வரிகளை ஏய்த்ததன் மூலம், ரூ.3,000 கோடி மோசடி செய்துள்ளது அம்பலமாகியுள்ளது.

    2014ல்தான் முதல் முறையாக இந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்தது.

    எல்லாமே முறைகேடு

    எல்லாமே முறைகேடு

    மாநில கலால்துறையின் பொருளாதார விசாரணை பிரிவு மற்றும் வரிவிதிப்பு துறை, மேற்சொன்ன நிறுவனத்தின் வர்த்தகம் திடீரென உயருவதை கண்டுபிடித்தன. காகிதம் தொடர்பான பொருட்களை இந்த நிறுவனம் தயாரித்து வந்தது. ஆனால் உற்பத்தி பொருட்களுக்கும், மின்சார கட்டணத்திற்கும் நடுவே மிகுந்த வித்தியாசம் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

    வங்கி மோசடி

    வங்கி மோசடி

    ஓய்வு பெற்ற அரசு அதிகாரி ஒருவர் மகனை தனது நிறுவனத்தில், இயக்குநர்களில் ஒருவராக சேர்த்துக்கொண்ட ராகேஷ் ஷர்மா, அவர் மூலமாக வரி ஏய்ப்பில் ஈடுபட முடிந்துள்ளது என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது. வங்கிகளில் கடன் பெற்று மோசடி செய்ததாகவும் ராகேஷ் ஷர்மா மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    பல நூறு கோடி

    பல நூறு கோடி

    விற்பனை வரி, சுங்க வரி பாக்கி மற்றும் அதன் வட்டி அனைத்தையும் கணக்கிட்டால் ரூ.2500 கோடி அளவுக்கு மோசடி நடந்துள்ளது தெரியவந்துள்ளது. இந்த நிறுவனம் பல்வேறு வங்கிகளில் கடன் பெற்றுள்ளது. சரியான லோன் தொகை தெரியவில்லை என்றாலும், அதுவும் பல நூறு கோடிகளுக்கு இருக்கும் என்கின்றன விசாரணை வட்டார தகவல்கள்.

    அதிகாரிகள் உடந்தை

    அதிகாரிகள் உடந்தை

    நிதி மோசடி, வருமான வரி ஏய்ப்பு உள்ளிட்ட அனைத்து விவகாரங்களையும் அமலாக்கத்துறை விசாரிக்க வேண்டும் எந்று ஹிமாச்சல பிரதேச அரசு பரிந்துரை செய்துள்ளது. ஹிமாச்சல பிரதேச அரசு அதிகாரிகள் துமையின்றி இவ்வளவு பெரிய வரி ஏய்ப்பு சாத்தியப்பட்டிருக்காது என்பதால் அதுகுறித்தும் அமலாக்கத்துறை விசாரிக்க உள்ளது.

    பட்ஜெட்டில் பாதி

    பட்ஜெட்டில் பாதி

    இதனிடையே கடந்த நான்கு நாட்களாக ராகேஷ் ஷர்மா தலைமறைவாகிவிட்டார். இந்த நிறுவனம் ஏய்த்த வரி தொகை எனது குட்டி மாநிலமான ஹிமாச்சல பிரதேச அரசு தாக்கல் செய்யும் ஆண்டு பட்ஜெட் மதிப்பில் சுமார் பாதி அளவு என்பது அதிர்ச்சியின் மற்றொரு அம்சம். ராக்கேஷ் நிறுவனத்திற்கு சொந்தமாக ஹிமாச்சல் பிரதேசம் தவிர்த்து, ஒடிசா, ஆந்திர பிரதேசம், உத்தர பிரதேசம், ராஜஸதான், மகாராஷ்டிரா மற்றும் மேகாலயா மாநிலங்களில் சொத்துக்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    An estimated Rs 3,000 crore tax scam has rocked the small hill state Himachal Pradesh.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X