For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கிராமங்களில் குளிர்பதன கிட்டங்கிகள் அமைக்க ரூ.5000 கோடி ஒதுக்கீடு: மின்சாரம் எங்கிருக்காம்?

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: நாட்டில் உள்ள கிராமங்களில் குளிர்பதன கிட்டங்கிகள் அமைக்க மத்திய பட்ஜெட்டில் ரூ.5 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் 84வது மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அவர் தனது பட்ஜெட் தாக்கலின்போது பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

Rs. 5000 crore allotted for farm produe warehousing in villages

அவர் விவசாயத் துறைக்கு மோடி தலைமையிலான அரசு முக்கியத்துவம் அளிக்கும் என்றார். நாட்டில் உள்ள கிராமப்புற பகுதிகளில் விவசாய விளைபொருட்களை சேமித்து வைக்க குளிர்பதன கிட்டங்கிகள் அமைக்க ரூ.5 ஆயிரம் கோடியை ஜேட்லி ஒதுக்கியுள்ளார்.

அவர் கிட்டங்கிகள் அமைக்க நிதி ஒதுக்கியது நல்ல விஷயம் தான். ஆனால் கிராமப்புறங்களில் குளிர்பதன கிட்டங்கிகளுக்கு மின்சாரம் எங்கிருந்து கிடைக்கும். கிராமத்து மக்கள் கடும் மின்வெட்டுகளால் அவதிப்பட்டு வருகிறார்கள். மின்சாரம் எப்பொழுது வரும் போகும் என்று தெரியாமல் உள்ளனர்.

இந்நிலையில் குளிர்பதன கிட்டங்கிகளை நடத்த மின்சாரத்திற்கு எங்கே போவது.

English summary
Finance minister Arun Jaitely announced Rs. 5000 crore for warehousing in villages. But the main issue is where will they get power to run these?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X