For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கர்நாடகா தேர்தல்: ரூ7 கோடி கள்ள ரூபாய் நோட்டுகள் அதிரடி பறிமுதல்!

கர்நாடகாவில் 7 கோடி மதிப்புள்ள கள்ள ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது. நேற்று இரவு போலீஸ் நடத்திய சோதனையில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    கர்நாடகா தேர்தல்: ரூ7 கோடி அதிரடி பறிமுதல்!- வீடியோ

    பெங்களூர்: கர்நாடகாவில் 7 கோடி மதிப்புள்ள கள்ள ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது. நேற்று இரவு போலீஸ் நடத்திய சோதனையில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    கர்நாடக சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வரும் மே 12ம் தேதி வாக்குப்பதிவும், மே 15ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் அங்கு போலீஸ் சோதனை அதிகரித்துள்ளது.

    Rs 7 crore fake currency seized by police in Belagavi in Karnataka amidst election

    நேற்று இரவு பெலகாவி பகுதியில் நடந்த சோதனையின் போது காரில் பதுக்கி கொண்டு செல்லப்பட்ட 7 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது. இந்த பணம் முழுக்க முழுக்க புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் ஆகும்.

    இதில் தொடர்புடைய ஒருவர் மட்டுமே கைது செய்யப்பட்டு இருக்கிறார். அவர் யாரிடம் இருந்து, யாருக்கு பணத்தை கொடுக்க கொண்டு சென்றார் என்று கண்டுபிடிக்கப்படவில்லை.

    கர்நாடகாவில் தேர்தல் நடக்க உள்ள சமயத்தில் இவ்வளவு கள்ள ரூபாய் நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    Police seized fake Indian currency notes with the face value of Rs 7 crore in Belagavi, Karnataka amidst election. One person arrested, case registered.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X