For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஓலாவில் மும்பையிலிருந்து புனேவிற்கு செல்ல 83000 ரூபாய்… அதிர்ந்து போன பயணி

Google Oneindia Tamil News

மும்பை: மும்பையில் இருந்து புனேவிற்கு சென்ற பயணிகளுக்கு 83 ஆயிரம் ரூபாய் கார் வாடகை செலுத்த வேண்டும் என்று ஓலா டிரைவர் பில்லை காட்டிய உடன் அதிர்ந்து போயுள்ளார் மும்பையைச் சேர்ந்த பயணி ஒருவர். இதற்காக, ஓலா நிறுவனம் அவரிடம் மன்னிப்பு கேட்டு செலுத்திய வாடகையை திருப்பி கொடுத்துவிட்டது.

மும்பையில் இருந்து புனேவிற்கு ஒரு திருமண நிகழ்விற்கு செல்ல பாட்டியா என்பவர் ஓலாவில் கார் புக் செய்தார். அவரது மனைவி மற்றும் இரு மகள்கள் என 4 பேர் காலை 6.30 மணிக்கு காரை எடுத்துக் கொண்டு புனே சென்றுள்ளனர். இரவு 9.25 மணிக்கு புனேவை சென்று அடைந்துள்ளனர்.

Rs 83,000 for Mumbai-Pune trip; Ola says sorry

பின்னர், டிரைவர் பில் மிஷினைத் தட்டி ஒரு துண்டுச் சீட்டை எடுத்து பாட்டியாவிடம் கொடுத்துள்ளார். அதை வாங்கி பார்த்த பாட்டியாவிற்கு இதயமே நின்றுவிடும் போல் ஆகிவிட்டது. 7000 கிலோ மீட்டர் ஓடிய காருக்கு 83, ஆயிரத்து 395 ரூபாய் வாடகை என பில் சொல்லி இருக்கிறது. அதிர்ந்து போன பாட்டியா, பில்லை திரும்ப திரும்ப பார்த்துள்ளார். ஒன்றும் புரியவில்லை. இதுகுறித்து டிரைவரிடம் கேட்டுள்ளார் பாட்டியா.

ஏதோ பிழை நடந்துள்ளதை புரிந்து கொண்ட டிரைவர் ஓலா அலுவலகத்தை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். பின்னர், ஓலா அதிகாரி, தவறு நடந்துவிட்டதை உறுதி செய்துவிட்டு, 347 கிலோ மீட்டருக்கு 4 ஆயிரத்து 88 ரூபாயை கட்டணமாக செலுத்துமாறும் சொல்லி இருக்கிறார். இதனையடுத்து, பாட்டியா 4 ஆயிரத்து 88 ரூபாயை கார் வாடகையாக செலுத்திவிட்டு, டிரைவருக்கு 100 ரூபாய் டிப்ஸ்சும் கொடுத்து விட்டு சென்றிருக்கிறார்.

பின்னர், ஓலா நிறுவனம், தொழில் நுட்ப கோளாறு காரணமாக இப்படி நடந்துவிட்டது என்றும், இனி இதுபோன்று நடக்காது என்றும் பாட்டியாவிடம் உறுதியளித்துள்ளது. இறுதியாக பாட்டியா செலுத்திய முழு தொகையையும் ஓலா நிறுவனம் திருப்பி கொடுத்துவிட்டது. இதனால் பாட்டியா ஒரே குஷியாகிவிட்டார்.

English summary
A Ghatkopar businessman got the shock of his life, albeit temporarily, after he was handed over a bill of Rs 83,395 for a round trip to Pune on an Ola cab.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X