ஆர்எஸ்எஸ் தொண்டர் படுகொலை - பதட்டத்தில் திருவனந்தபுரம்
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் அருகே ஆர்எஸ்எஸ் தொண்டர் ஓருவர் படுகொலை செய்யப்பட்டார். இதனால் அங்கு பதட்டம் நிலவுகிறது.
கேரள மாநிலம் கண்ணூர் பாப்பினசேரி பகுதியை சேர்ந்தவர் சுஜித். இவர் ஒரு ஆர்எஸ்எஸ் தொண்டர். இரவு சுமார் 11 மணி அளவில் 10 அடங்கிய கும்பல் இவரது வீட்டுக்குள் புகுந்தது. அவர்களது கையில் பயங்கர ஆயுதங்கள் இருந்ததால் அவர்களை பார்த்து அதிர்ச்சி அடைந்த சுஜித் தப்பி ஓட முயன்றார்.

சுஜித் சுற்றி வளைத்த கும்பல் அவரை சராமரியாக வெட்டி தள்ளியுள்ளது. இதை தடுக்க முயன்ற சுஜித்தின் பெற்றோர் மற்றும் அவரது தம்பிக்கும் வெட்டி விழுந்தது. படுகாயம் அடைந்த சுஜித் மற்றும் பெற்றோரையும், தம்பியையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் காலை சுஜித் இறந்தார். அவரது பெற்றோரும், தம்பியும் கண்ணூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவல் அறிந்ததும் வளபட்டணம் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.
இந்த கொலைக்கு மார்க்சிஸ்ட் கட்சியினர் தான் காரணம் என ஆர்எஸ்எஸ் குற்றம் சாட்டியுள்ளது. இந்த சம்பவத்தால் கண்ணூரில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பாஜக அழைப்பை ஏற்று பாப்பினசேரி, கல்யாசேரி ஆகிய பகுதிகளில் கடையடைப்பு நடந்தது. இதனால் சந்தேகத்தின் பேரில் மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த 10 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.