For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மோகன் பகவத் அப்படி சொல்லல... ஆர்எஸ்எஸ் மழுப்பல் பதில்!

இந்திய ராணுவத்தையும் ஆர்எஸ்எஸ்ஸையும் ஒப்பிட்டு மோகன் பகவத் கருத்து கூறவில்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

Recommended Video

    மோகன் பகவத் பெருமை பேச்சு!- வீடியோ

    டெல்லி : இந்திய ராணுவத்தையும் ஆர்எஸ்எஸ்ஸையும் ஒப்பிட்டு மோகன் பகவத் கருத்து கூறவில்லை என்று ஆர்எஸ்எஸ் அமைப்பு விளக்கம் அளித்துள்ளது. மோகன் பகவத்தின் கருத்து கருத்து திரித்து அர்த்தம் கொள்ளப்படுவதாகவும் ஆர்எஸ்எஸ் கூறியுள்ளது.

    பீகாரில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் பொதுக்கூட்டத்தில் பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் போர் வந்தார் ராணுவம் தயாராகக் கூட ஆறேழு மாதங்கள் ஆகும். ஆனால் ஆர்எஸ்ஸ் 3 மாதத்திலேயே தயாராகிவிடும் அந்த அளவிற்கு ராணுவ கட்டுப்பாடுடன் செயல்படும் அமைப்பு என்று மோகன் பகவத் பேசி இருந்தார்.

    மோகன் பகவத்தின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கடுமையான கண்டனம் தெரிவித்திருந்தார். நாட்டிற்காக உயிர்நீத்த ராணுவ வீரர்களை மோகன் பகவத் அவமானப்படுத்திவிட்டதாகவும், ஆர்எஸ்ஸ் இதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

    ஜம்முவில் நடக்கும் தாக்குதல்

    ஜம்முவில் நடக்கும் தாக்குதல்

    ஜம்முகாஷ்மீரில் ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் நடத்தி வரும் தாக்குதலை எதிர்த்து ராணுவம் போராடி வருகிறது. இந்த தீவிரவாத தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்து 11 பேர் காயமடைந்துள்ள நிலையில், இந்திய ராணுவத்தையும், ஆர்எஸ்எஸ்ஸையும் ஒப்பிட்டு மோகன் பகவத் பேசி இருப்பது பலரிடையே அதிருப்தியை ஏற்படுத்தயுள்ளது.

    ஆர்எஸ்எஸ் மழுப்பல்

    ஆர்எஸ்எஸ் மழுப்பல்

    இந்நிலையில் மோகன் பகவத்தின் பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக ஆர்எஸ்எஸ் வெளிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது. மோகன் பகவத் போர் வந்தால் ராணுவம் மக்களை அதற்கு ஏற்ப தயார் செய்ய 6 மாதங்கள் ஆகும ஆனால் ஆர்எஸ்எஸ் 3 மாதத்தில் தயாராகிவிடும் என்ற அர்தத்தில் தான் சொன்னார்.

    ராணுவத்தோடு ஒப்பிடவில்லை

    ராணுவத்தோடு ஒப்பிடவில்லை

    மோகன் பகவத் ராணுவத்தையும் ஆர்எஸ்எஸ்ஸையும் ஒப்பிடவில்லை. அவர் ஆர்எஸ்எஸ், பொதுமக்களை ஒப்பிட்டு தான் அந்த கருத்தை கூறினார் என்றும் அறிக்கையில் மழுப்பலாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

    பாஜக மவுனம்

    பாஜக மவுனம்

    பாஜகவிற்கு எதிராக கருத்து சொல்பவர்கள், பாஜகவின் திட்டங்களை எதிர்ப்பவர்களை தேச விரோதி என்று சொல்வது அந்தக் கட்சித் தலைவர்களின் வாடிக்கை. ஆனால் ராணுவத்தையே விமர்சித்துவிட்டு அதற்கு மழுப்பலான ஒரு விளக்கத்தையும் ஆர்எஸ்எஸ் கூறுகிறது, ஆனால் இது குறித்து பாஜக வாய் திறக்கவேயில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Amid Row, RSS issued explaination statement Says Chief Mohan Bhagwat's army remark misrepresented, he did bt compare army and RSS rather compared general public and RSS only.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X