For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பினராயி விஜயன் தலைக்கு ரூ.1 கோடி விலை அறிவித்த ஆர்.எஸ்.எஸ். தலைவர் அதிரடி நீக்கம்

கேரளா முதல்வர் பினராயி விஜயன் தலைக்கு ரூ. 1 கோடி பரிசு அறிவித்த ஆர்.எஸ்.எஸ். தலைவர் நீக்கப்பட்டார்.

By Karthikeyan
Google Oneindia Tamil News

டெல்லி: கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைக்கு ரூ.1 கோடி விலை அறிவித்த ஆர்.எஸ்.எஸ். தலைவர் அனைத்து பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டார்.

கேரள மாநிலத்தில் இடதுசாரிகள் ஆட்சி நடைபெற்று வருகிறது. பினராயி விஜயன் முதல்வராக உள்ளார். இடதுசாரி தொண்டர்கள் மற்றும் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது.

RSS leader sacked from all posts

கேரளாவில் தொடரும் அரசியல் வன்முறையில் பாஜக, ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் கொலை செய்யப்படுவதும் அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது.

இதனை கண்டிக்கும் விதமாக மத்தியபிரதேசம் மாநிலம் உஜ்ஜைன் பகுதியின் ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் குழு தலைவராக இருக்கும் குந்தன் சந்திரவாத் என்பவர் கேராளாவில் நடந்த கூட்டத்தில் அம்மாநில முதல்வர் பினராயி விஜயனின் தலையை கொண்டு வருபவர்களுக்கு 1 கோடி ரூபாய் வழங்குவதாக சர்ச்சைகுரிய கருத்தை தெரிவித்தார். இந்த கருத்துக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது.

இந்நிலையில் பினராயி விஜயன் தலைக்கு ரூ.1 கோடி விலை அறிவித்த ஆர்.எஸ்.எஸ். தலைவர் குந்தன் சந்திராவத் அனைத்து பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டார். ஏற்கனவே தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்த சந்திரவாத், கேரளாவில் அப்பாவி மக்கள் கொல்லப்படும் விவகாரத்தின் தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாகவும், என்னுடைய கருத்து தனிப்பட்டது என்றார். ஆர்.எஸ்.எஸ். தலைவராக கிடையாது எனக் கூறியிருந்தார்.

English summary
RSS leader who was sacked form the right-wing outfit for declaring Rs 1 crore bounty on Kerala Chief Minister Pinarayi Vijayan
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X