For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முடிகிறது மோடி சகாப்தம்? பிரதமராகிறாரா நிதின் கட்காரி? ஆர்.எஸ்.எஸ். அவசர ஆலோசனை!

Google Oneindia Tamil News

Recommended Video

    பிரதமராகிறாரா நிதின் கட்காரி? ஆர்.எஸ்.எஸ். அவசர ஆலோசனை!

    நாக்பூர்: லோக்சபா தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மை பலத்துடன் மீண்டும் வெற்றி பெற்றால் மத்திய அமைச்சர் நிதின் கட்காரியை பிரதமராக்குவதற்கான வேலைகளில் ஆர்.எஸ்.எஸ். தீவிரம் காட்டி வருகிறது என தகவல்கள் வெளியாகின. இதனை உறுதிப்படுத்தும் வகையில் நிதின் கட்காரியை நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பொதுச்செயலர் பையாஜி ஜோஷி இன்று நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தியது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பாஜகவின் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை அக்கட்சியின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கம்தானன் தீர்மானித்து வருகிறது. பிரதமராக மோடியை முன்னிறுத்தியதும் ஆர்.எஸ்.எஸ்.இயக்கம்தான்.

    ஆனால் மோடி ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திடம் இருந்து தாம் விலகியிருப்பதாகவே காட்டிக் கொண்டார். மேலும் அத்வானி உள்ளிட்ட பாஜகவின் முதுபெரும் தலைவர்களை மோடி- அமித்ஷா அணி ஒதுக்கி அவமானப்படுத்தியது. இதனால் மோடி மீது ஆர்.எஸ்,எஸ். இயக்கம் அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்டு வந்தது.

    கருத்துக்கணிப்பு முடிவுகளால் குழப்பம்: மாயாவதி- அகிலேஷ் யாதவுடன் முக்கிய ஆலோசனைகருத்துக்கணிப்பு முடிவுகளால் குழப்பம்: மாயாவதி- அகிலேஷ் யாதவுடன் முக்கிய ஆலோசனை

    மீண்டும் பாஜக

    மீண்டும் பாஜக

    பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, ஒரு செய்தியாளர் சந்திப்பில் இதை வெளிப்படையாகவே கூறினார். இந்நிலையில் மத்தியில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கும் என தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்புகள் தெரிவித்துள்ளன.

    பிரதமராக கட்காரி?

    அப்படி பாஜக வெற்றி பெற்றால் பிரதமராக மோடியே தொடருவது சந்தேகம் என கூறப்பட்டு வருகிறது. மோடிக்கு பதிலாக நிதின் கட்காரி போன்ற மென்மை முகங்களை பிரதமர் நாற்காலியில் அமரவைக்க ஆர்.எஸ்.எஸ். முயற்சிப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.

    ஆர்.எஸ்.எஸ். - மோடி

    ஆர்.எஸ்.எஸ். - மோடி

    இதனால் தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்னதாக நாக்பூரில் உள்ளள ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலைமை அலுவலகத்துக்கு செல்ல மோடி திட்டமிட்டிருந்தார். தமக்கே மீண்டும் பிரதமர் பதவி வழங்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர்களிடம் வலியுறுத்தவும் மோடி முடிவு செய்திருந்தார்.

    கட்காரி- ஆர்.எஸ்.எஸ். ஆலோசனை

    கட்காரி- ஆர்.எஸ்.எஸ். ஆலோசனை

    இந்நிலையில்தான் நாக்பூரில் மத்திய அமைச்சர் நிதின் கட்காரியை ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பொதுச்செயலாளர் பையாஜி ஜோஷி இன்று நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தி உள்ளார். இதனால் பிரதமர் பதவிக்கு நிதின் கட்காரியை ஆர்.எஸ்.எஸ். முன்னிறுத்த தயாராகிவிட்டது உறுதியாகி உள்ளது. சமூக வலைதளங்களிலும் நிதின் கட்காரிதான் அடுத்த பிரதமரா? என்கிற கேள்வியுடன் விவாதங்கள் களைகட்டியுள்ளன.

    English summary
    RSS General Secretary Bhaiyaji Joshi today met Union Minister Nitin Gadkari in Nagpur.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X