For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கிலோ ரூ 18க்கு வெங்காயத்தை வாங்கி மக்களுக்கு ரூ. 32க்கு விற்றதா ஆம் ஆத்மி அரசு?

Google Oneindia Tamil News

டெல்லி: கிலோ ரூ. 18 என்று வெங்காயத்தை மொத்தமாக கொள்முதல் செய்து அதை மக்களுக்கு ரூ. 32க்கு விற்றுள்ளது டெல்லி ஆம் ஆத்மி அரசு என்று புது சர்ச்சை கிளம்பியுள்ளது. ஆனால் தாங்கள் அப்படியெல்லாம் அநியாயமாக விற்கவில்லை என்று ஆம் ஆத்மி அரசு மறுத்துள்ளது.

ஆனால் மொத்தமாக வாங்கியபோது கிலோவுக்கு 18 மட்டுமே டெல்லி அரசு கொடுத்துள்ளது என்பதை ஆர்டிஐ தகவல் நிரூபிப்பதாக இந்தியா டுடே செய்தி தெரிவித்துள்ளது. இதுதொடர்பான விரிவான ஆதாரத்தையும் அது வெளியிட்டுள்ளது.

இதனால், மிகக் குறைந்த விலைக்கு வெங்காயத்தை வாங்கி அதை அதிக விலை வைத்து மக்களுக்கு விற்றதாக டெல்லி அரசு தற்போது சர்ச்சையில் மாட்டியுள்ளது.

சிறு விவசாயிகளிடமிருந்து வாங்கி...

சிறு விவசாயிகளிடமிருந்து வாங்கி...

சிறுவிவசாயிகள் விவசாய தொழில் அமைப்பிடம் கிலோ வெங்காயம் ரூ. 18.57 என்ற விலைக்கு 2511 மெட்ரிக் டன் வெங்காயத்தை டெல்லி அரசு வாங்கியுள்ளது. வரிகள் உள்பட அனைத்தும் அடங்கியது இந்த விலையாகும்.

நாசிக், இந்தூரிலிருந்து இறக்குமதி...

நாசிக், இந்தூரிலிருந்து இறக்குமதி...

இந்த வெங்காயத்தை மகாராஷ்டிர மாநிலம் நாசிக், மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் ஆகிய நகரங்களிலிருந்து விலைக்கு வாங்கியுள்ளது டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி அரசு.

கிலோ ரூ. 30க்கு விற்பனை...

கிலோ ரூ. 30க்கு விற்பனை...

ஆனால் இப்படி குறைந்த விலைக்கு வாங்கப்பட்ட வெங்காயத்தை மக்களுக்கு ரூ. 30க்கு என்று விற்றுள்ளது அரசு. இதுதான் சர்ச்சையாகும். ஆனால் இதில் உண்மை இருப்பதாக தெரியவில்லை.

இல்லை, அப்படியெல்லாம் விற்கவில்லை...

இல்லை, அப்படியெல்லாம் விற்கவில்லை...

இதை ஆம் ஆத்மி தலைவர் அசுடோஷ் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், கிலோ ரூ. 32.86 என்ற விலையில்தான் இந்த வெங்காயத்தை ஆம் ஆத்மி அரசு வாங்கியது. இதுதான் உண்மை. மேலும் நாசிக் மொத்த சந்தையிலிருந்து நேரடியாக வெங்காயம் வாங்கப்படவில்லை.

சிறுவிவசாயிகள் விவசாய தொழில் அமைப்பிடமிருந்து வாங்கினோம்...

சிறுவிவசாயிகள் விவசாய தொழில் அமைப்பிடமிருந்து வாங்கினோம்...

நாசிக் மொத்த சந்தையிலிருந்து மத்திய அரசுக்குச் சொந்தமான சிறுவிவசாயிகள் விவசாய தொழில் அமைப்பு வாங்கி அவர்களிடமிருந்துதான் நாங்கள் வாங்கினோம். டெல்லி அரசால் இந்த வெங்காயம் கிலோ ரூ. 32.86க்குத்தான் வாங்கப்பட்டது. இதை யார் வேண்டுமானாலும் கேட்டுப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

அவர்களுக்குத்தான் ரூ. 18க்கு விற்கப்பட்டது...

அவர்களுக்குத்தான் ரூ. 18க்கு விற்கப்பட்டது...

மேலும் டெல்லி அரசிடம் ரூ. 18க்கு இந்த வெங்காயம் விற்கப்படவில்லை. மாறாக, மத்திய அரசு நிறுவனத்திடம்தான் நாசிக் மொத்த சந்தை வியாபாரிகள் கிலோ ரூ. 18க்கு விற்றுள்ளனர் என்று கூறியுள்ளார் அசுடோஷ்.

ஆர்டிஐ தகவல் சொல்வது என்ன?

ஆர்டிஐ தகவல் சொல்வது என்ன?

ஆர்டிஐ தகவல்களைப் பார்த்தால், சிறு விவசாயிகள் விவசாய தொழில் அமைப்பு நாசிக் சந்தையிலிருந்து ரூ. 18க்கு வெங்காயத்தை வாங்கி, அதை டெல்லி அரசிடம் ரூ. 32க்கு விற்றுள்ளதாகவே உள்ளது.

கெஜ்ரிவால் அரசு சொன்னது என்ன?

கெஜ்ரிவால் அரசு சொன்னது என்ன?

இந்த வெங்காய விற்பனை குறித்து முன்னதாக கெஜ்ரிவால் அரசு கூறுகையில், கிலோ வெங்காயம் ரூ. 32.86 மற்றும் கூடுதல் வரி கிலோவுக்கு 7 என செலவிட்டு வாங்கப்பட்ட வெங்காயமானது, மக்களின் சவுகரியத்திற்காக கிலோ ரூ. 30க்கு விற்கப்படுவதாக கூறியிருந்தது.

English summary
An RTI reply has revealed that the Arvind Kejriwal-led AAP government procured onions at a much cheaper price of Rs 18/kg and sold them to the people of Delhi at Rs 30/kg. The RTI revelation shows that the move is in stark contrast to the Cabinet decision that the government will sell onions at a no-profit-no-loss basis in the National Capital.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X