For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தல சுத்துதே.. புதிய ஊதா கலரு 100 ரூபாய் நோட்டுக்கு ஏற்ப ஏடிஎம்களை மாற்ற ரூ.100 கோடி செலவு ஆகுமாம்!

புதிய 100 ரூபாய் நோட்டுக்கு ஏற்றபடி ஏடிஎம்களை மாற்றி அமைக்க 100 கோடி ரூபாய் செலவாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    புதிய 100 ரூபாய் நோட்டு மாதிரிகளை வெளியிட்டது ரிசர்வ் வாங்கி- வீடியோ

    டெல்லி: புதிய 100 ரூபாய் நோட்டுக்கு ஏற்றபடி ஏடிஎம்களை மாற்றி அமைக்க 100 கோடி ரூபாய் செலவாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

    பணமதிப்பு இழப்பு நடவடிக்கையை தொடர்ந்து, கடந்த 2 ஆண்டுகளில் அடுத்தடுத்து புதிய ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகிறது. முதலில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளையும், பிறகு 200 ரூபாய், 500 ரூபாய், 50 ரூபாய், 10 ரூபாய் நோட்டுகளையும் வெளியிட்டது.

    ஒவ்வொரு நோட்டும் ஒவ்வொரு கலரில் உள்ளது. இந்நிலையில், புதிய 100 ரூபாய் நோட்டு விரைவில் வெளியிடப்படும் என்று ரிசர்வ் வங்கி நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது.

    அளவில் சிறியது

    அளவில் சிறியது

    இந்த நோட்டு, ஊதா நிறத்தில் இருக்கும். இதன் அளவு 66 மி.மீ.க்கு 142 மி.மீ. ஆக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, தற்போது உள்ள நோட்டுகளின் அளவை விட குறைவாகும்.

    ஏடிஎம் எந்திரங்கள்

    ஏடிஎம் எந்திரங்கள்

    இந்த புதிய 100 ரூபாய் நோட்டுகள், வங்கிகள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ஏற்கனவே புதிய 2 ஆயிரம், 200 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்ட போது அவற்றை நிரப்புவதற்கு ஏற்ப ஏடிஎம் எந்திரங்களில் மாற்றம் செய்யப்பட்டது.

    ஏடிஎம் எந்திரங்களில் மாற்றம்

    ஏடிஎம் எந்திரங்களில் மாற்றம்

    இந்நிலையில் தற்போது வெளியிடப்படவுள்ள புதிய 100 ரூபாய் நோட்டுகள், ஏற்கெனவே புழக்கத்தில் உள்ள நோட்டுகளைவிட சிறியதாக இருக்கும் என்பதால், அவற்றை நிரப்புவதற்கு ஏற்ப நாடு முழுவதும் இரண்டரை லட்சம் ஏடிஎம்களில் மாற்றம் செய்யப்பட வேண்டியுள்ளது.

    விநியோகிக்க முடியாது

    விநியோகிக்க முடியாது

    இதற்கு 12 மாதங்கள் வரை ஆகும் என ஏடிஎம் எந்திர தயாரிப்பாளர்கள் கூறியுள்ளனர். புதிய 100 ரூபாய் நோட்டுகளை விநியோகிப்பதற்கு ஏற்ப ஏடிஎம் எந்திரங்களை மாற்றியமைத்தால், பழைய 100 ரூபாய் நோட்டுகளை அவற்றின் மூலம் விநியோகிக்க முடியாது என்று கூறப்படுகிறது.

    ரூ.100 கோடி செலவாகும்

    ரூ.100 கோடி செலவாகும்

    இந்நிலையில் புதிய 100 ரூபாய் நோட்டுகளுக்கு ஏற்ப ஏடிஎம் இயந்திரங்களில் மாற்றங்களை மேற்கொள்ள 100 கோடி ரூபாய் செலவாகும் என ஏடிஎம் எந்திர தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    English summary
    Rupees 100 crores will be cost to convert the ATMs for new 100 rupees.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X