For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியாவில் 16 அணு உலைகளை அமைக்கிறது ரஷியா! வருகிறார் துணை பிரதமர் திமித்ரி!!

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் 16 அணுஉலைகளை அமைக்க ரஷியா விருப்பம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்தியாவுக்கான ரஷிய தூதர் அலெக்சாண்டர் காடகின் கூறியதாவது:

பிரதமர் நரேந்திர மோடியுடன் ரஷியாவுக்கு நல்லுறவு உள்ளது. அவருக்கு எதிராக எந்த தடைகளையும் ரஷியா விதித்தது கிடையாது.

ரஷியாவில் அவர் 3 முறை வெற்றிகரமாக பயணம் செய்துள்ளார். அதனால் அவருடன் எங்கள் நாட்டுக்கு எந்த பிரச்னையும் இல்லை என்றே கருதுகிறோம்.

Russia hopes for defence, nuclear cooperation from Modi

அவரது ஆட்சிக்காலத்தில் இருநாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பு, குறிப்பாக பாதுகாப்பு துறை மற்றும் அணுசக்தி துறையில் இருக்கும் ஒத்துழைப்பு அதிகரிக்கும் என நம்புகிறோம். எரிசக்தி துறையில் ரஷியா ஏராளமான திட்டங்களை வைத்துள்ளது.

இந்தியாவில் 14 முதல் 16 அணுஉலைகளை அமைக்க ரஷியா விரும்புகிறது. 5ஆம் தலைமுறை போர் விமானம் கட்டுதல் உள்பட இந்தியாவுடன் பாதுகாப்பு துறையில் ஒத்துழைப்பை அதிகரித்துக் கொள்ள ரஷியா விரும்புகிறது.

அகுலா நீர்மூழ்கி கப்பலை இந்தியாவுக்கு ரஷியா குத்தகைக்கு வழங்கும்படி எந்த வேண்டுகோளும் வரவில்லை. இருதரப்பு உறவு தொடர்பாக இந்தியாவின் புதிய தலைமையுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு, ரஷிய துணைப் பிரதமர் திமித்ரி ரோகோஜின், இந்த மாதம் இந்தியா வருவார் என எதிர்பார்க்கிறோம்

இவ்வாறு காடகின் கூறினார்.

English summary
Russia has good relations with Prime Minister Narendra Modi and hopes cooperation between the two countries, particularly in defence and nuclear cooperation, will succeed during his tenure. Russian Deputy Prime Minister Dmitryi Rogozin, the pointsman on India relations in Moscow, is expected to visit India this month to hold talks with new leadership in India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X