For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆர்பிஐ போர்டில் எஸ்.குருமூர்த்தி.. தற்காலிக இயக்குனராக நியமனம்!

ரிசர்வ் வங்கியின் தற்காலிக இயக்குனராக துக்ளக் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    ரிசர்வ் வங்கியின் தற்காலிக இயக்குனராக துக்ளக் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி

    டெல்லி: ரிசர்வ் வங்கியின் தற்காலிக இயக்குனராக துக்ளக் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.

    ரிசர்வ் வங்கியின் கவர்னராக தற்போது ஊர்ஜித் பட்டேல் செயல்பட்டு வருகிறார். அதே சமயத்தில் சட்டத்தின்படி ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு 10 இயக்குனர்களை அதிகபட்சம் நியமிக்க முடியும். 8 பேர் ஏற்கனவே நியமிக்கப்பட்டுவிட்டார்கள்.

    S Gurumurthy appointed as a part-time director in RBI

    இந்த நிலையில் தற்போது இரண்டு புதிய தற்காலிக இயக்குனர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். துக்ளக் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி மற்றும் சதீஸ் மாரதே ஆகியோர் தற்காலிக இயக்குனர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

    துக்ளக் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி ஆர்எஸ்எஸ் அமைப்பின் துணை இயக்கமான சுதேசி ஜக்ரான் மான்ச் இயக்கத்தின் துணை இயக்குனராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்ததக்கது. சதீஸ் மாரதே, என்ஜிஓ ஒன்றின் இயக்குனர் ஆவார்.

    இவர்கள் இருவரின் பதவிக்காலம் நான்கு ஆண்டுகள் ஆகும். பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் செயல்படும், அமைச்சரவையின் நியமனங்கள் குழு இந்த பரிந்துரையை செய்து இருக்கிறது.

    English summary
    S Gurumurthy appointed as a part-time director in Reserve Bank India by Central Government.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X