For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சபரிமலை ஐயப்பனை தரிசிக்க செல்லும் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதித்த தேவசம்போர்டு

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

பத்தனம்திட்டா: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு கேரள அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதில் 24 மணி நேரத்திற்கு முன்பாக எடுக்கப்பட்ட கொரோனா நெகடிவ் சான்றிதழை கொண்டு வர வேண்டும் என்று அறிவித்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காக வரும் 15ஆம் தேதி கோவில் நடை திறக்கப்பட உள்ளது. பக்தர்கள் கார்த்திகை 1ஆம் அதாவது வரும் 16 ஆம் தேதி முதல் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என கேரள அரசு அறிவித்தது.

Sabarimala ayyappan Temple Mandala Puja Darshan new rules announced

ஆன்லைன் மூலமாக பதிவு செய்யும் 1000 பக்தர்களுக்கு மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. இதன் முக்கிய விதிமுறையாக கோவிலுக்கு வரும் பக்தர்கள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழை கொண்டு வரவேண்டும் என அரசு உத்தரவிட்டிருந்தது. பம்பையில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு கேரள அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதில் 24 மணி நேரத்திற்கு முன்பாக எடுக்கப்பட்ட கொரோனா நெகடிவ் சான்றிதழை கொண்டு வர வேண்டும் என்று அறிவித்துள்ளது.

கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கொரோனா இருப்பின் அவர்கள் அங்கேயே தங்கி சிகிச்சை பெறவும் அல்லது அவர்களின் விருப்பத்தின் பேரில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கவும் ஏற்பாடு செய்யப்படும் என்றும் கேரள அரசு அறிவித்துள்ளது.

முன்னதாக 48 மணி நேரத்துக்கு முன்பாக சோதனை எடுத்த சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்று கேரள அரசு அறிவித்திருந்த நிலையில் தற்போது அது 24 மணிநேரமாக குறைக்கப்பட்டுள்ளது இந்த அறிவிப்பு பக்தர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

English summary
The Kerala government has imposed strict restrictions on devotees visiting the Sabarimala ayyappan Temple. It has been announced that the corona test taken before 24 hours must bring the negative certificate.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X