For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சபரிமலை ஐயப்பன் கோவிலில் செல்வ வளம் தரும் படிபூஜை - தேவசம்போர்டு புது கட்டுப்பாடு

சபரிமலையில் மாலை 6 மணி முதல் 8 மணி வரை படி பூஜை உட்பட சிறப்பு பூஜைகள் நடைபெறும் வேளைகளிலும் பக்தர்கள் 18ஆம் படி ஏறவும், சாமியை தரிசனம் செய்யவும், இரவு 8 மணிக்கு மேல் சன்னிதானத்தில் தங்கவும் அனுமதிக்க

Google Oneindia Tamil News

சபாரிமலை: சபரிமலை ஐயப்பன் கோவிலில் படிபூஜையை தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவிலுக்கு சாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் மாலை 6 மணி முதல் 8 மணி வரை படி பூஜை உட்பட சிறப்பு பூஜைகள் நடைபெறும் வேளைகளிலும் பக்தர்கள் 18ஆம் படி ஏறவும், சாமியை தரிசனம் செய்யவும், இரவு 8 மணிக்கு மேல் சன்னிதானத்தில் தங்கவும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தேவசம் போர்டு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபரிமலையில் பதினெட்டாம் படிகளுக்கு பூஜை செய்தால் குடும்பத்தில் செல்வம் பெருகும் என்பதோடு சபரிமலை ஐயப்பனின் பூரண அருள் அந்த குடும்பத்திற்கு கிடைக்கும் என்பது ஐதீகம். இதன் காரணமாகவே பெரும்பாலான பக்தர்கள் படி பூஜை செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். படி பூஜை செய்வதற்கு முன் பதிவு செய்யவேண்டியது கட்டாயம். முன்பதிவு செய்யாமல் படி பூஜை செய்ய முடியாது. வரும் 2039ஆம் ஆண்டு வரையில் முன்பதிவு முடிந்துவிட்டது.

மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த 15ஆம்தேதி திறக்கப்பட்டது. 16ஆதேதி முதல் வழக்கமான பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடந்து வருகிறது. கொரோனாவை முன்னிட்டு பக்தர்கள் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி சாமியை தரிசனம் செய்து செல்கிறார்கள்.

தினசரி பூஜைகள்

தினசரி பூஜைகள்

திருவிதாங்கூர் தேவஸ்தானம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதில் சபரிமலையில் தினமும் அதிகாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை சுமார் 13 மணி நேரம் தினசரி பூஜைகள் நடந்து வருகிறது. இதில் 4 மணி நேரம் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. இந்த பூஜை நேரங்களில் பக்தர்கள் 18ஆம் படி ஏறவும், சாமியை தரிசனம் செய்யவும் அனுமதி இல்லை.

அதிகாலையில் பக்தர்கள் அனுமதி

அதிகாலையில் பக்தர்கள் அனுமதி

அதாவது, அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, நிர்மால்ய தரிசனத்தை தொடர்ந்து கணபதி ஹோமம் நடைபெறும். இந்த பூஜைகள் நிறைவடைந்த பின் 5.45 மணிக்கு பின்னரே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். அதே போல் காலை 7 மணி முதல் 9 மணி வரை உஷபூஜை மற்றும் உதயாஸ்தமன பூஜைகள் நடக்கும் வேளைகளிலும் சாமியை, பக்தர்கள் தரிசனம் செய்ய முடியாது. சிறப்பு பூஜைகளை நடத்துவோரும், ஊழியர்கள் மட்டுமே தரிசனம் செய்ய முடியும்.

மாலை 6 மணி வரை தரிசனம்

மாலை 6 மணி வரை தரிசனம்

தற்போது பக்தர்கள் கூட்டம் குறைவு என்பதால், பக்தர்கள் வழக்கமான மேம்பாலம் வழியாக செல்ல தேவை இல்லை. பதினெட்டாம் படி வழியாக ஏறி வலது பக்கம் வழியாக சென்று தனி மனித இடை வெளியை கடை பிடித்து தரிசனம் செய்யலாம். மேலும் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டதும் 6 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். 6 மணி முதல் 8 மணி வரை படி பூஜை உட்பட சிறப்பு பூஜைகள் நடைபெறும் வேளைகளிலும் பக்தர்கள் பதினெட்டாம் படி ஏறவும், சாமியை தரிசனம் செய்யவும், இரவு 8 மணிக்கு மேல் சன்னிதானத்தில் தங்கவும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டது.

பதினெட்டு படிகளுக்கும் பூஜை

பதினெட்டு படிகளுக்கும் பூஜை

ஐயப்பனுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் போலவே சபரிமலையில் ஐயப்பன் சன்னதிக்கு செல்ல பக்தர்கள் பயன்படுத்தும் பதினெட்டாம்படி பூஜையும் முக்கியத்துவம் வாய்ந்தது. சபரிமலை ஐயப்பன் கோவில் என்றாலே ஸ்பெஷல் தான் என்பது அனைத்து மதத்தினருக்கும் தெரியும். அங்கு நடைபெறும், மண்டல பூஜை, மகர விளக்கு, மகர ஜோதி தரிசனம், மாதாந்திர பூஜை மற்றும் படி பூஜை என்று சொல்லப்படும் 18 படிகளுக்கும் நடைபெறும் பூஜையும் சிறப்பு வாய்ந்தது.

பதினெட்டு படிகளுக்கு பூஜை செய்ய முன்பதிவு

பதினெட்டு படிகளுக்கு பூஜை செய்ய முன்பதிவு

இந்த படி பூஜை செய்வதற்கு விருப்பமுள்ளவர்கள் கட்டணம் செலுத்த வேண்டியது அவசியமாகும். இதற்கு 75 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டியது அவசியம். பதினெட்டாம் படி பூஜையை செய்தால் குடும்பத்தில் செல்வம் பெருகும் என்பதோடு ஐயப்பனின் பூரண அருள் அந்த குடும்பத்திற்கு கிடைக்கும் என்பது ஐதீகம். இதன் காரணமாகவே பெரும்பாலான பக்தர்கள் படி பூஜை செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். படி பூஜை செய்வதற்கு முன் பதிவு செய்யவேண்டியது கட்டாயம். முன்பதிவு செய்யாமல் படி பூஜை செய்ய முடியாது. வரும் 2039ஆம் ஆண்டு வரையில் முன்பதிவு முடிந்துவிட்டது என்று தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.

English summary
It has been reported that devotees are not allowed to perform Padipooja at the Sabarimala Iyappan Temple. Devotees coming to the temple for Sami darshan will not be allowed to climb the 18th step, perform Sami darshan and stay in the sanctum sanctorum after 8 pm during special pujas, including puja from 6 pm to 8 pm, the Devasam Board said in a statement.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X