For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நவம்பர் 16ம் தேதி சபரிமலை திறப்பு.. ஆன்லைன் முன்பதிவு.. பேருந்து வசதி.. ஒய்விட வசதிகள் அறிமுகம்

Google Oneindia Tamil News

சபரிமலை: இரண்டு மாத வருடாந்திர யாத்திரைக்காக வரும் நவம்பர் 16 ஆம் தேதி சபரிமலை ஐய்யப்பன் கோயில் திறக்கப்பட உள்ளது.

மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜையை ஒட்டி சபரிமலையில் நடை திறக்கப்பட உள்ளது.

சபரிமலை ஐயப்பன்கோயில் ஆண்டுதோறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜையையொட்டி கார்த்திகை மற்றும் மார்கழி, தை மாதத்தின் முதல் வாரம் வரை திறந்திருக்கும் அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து வருவார்கள்.

அயோத்தியில் முஸ்லீம் தரப்புக்கு 5 ஏக்கர் நிலம் ஒதுக்க உத்தரவு ஏன்? உச்சநீதிமன்ற தீர்ப்பில் விளக்கம்அயோத்தியில் முஸ்லீம் தரப்புக்கு 5 ஏக்கர் நிலம் ஒதுக்க உத்தரவு ஏன்? உச்சநீதிமன்ற தீர்ப்பில் விளக்கம்

மேல்சாந்தி நியமனம்

மேல்சாந்தி நியமனம்

இந்த ஆண்டு சபரிமலை ஐயப்பன் கோயில் நவம்பர் 16ம் தேதி திறக்கப்படும் எனஅறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 16ம் தேதி மாலை 5ணிக்க தந்திரி மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி கோயிலின் கருவறையை திறக்க உள்ளார். இரவு 7 மணிக்கு ஸ்ரீகோவில் முன் நடைபெறும் விழாவில் புதிய மேல்சாந்தியாக ஏகே சுதிர் நம்பூதிரி நியமிக்கப்படுவார்.

புதிய மேல்சாந்தி

புதிய மேல்சாந்தி

விழாவின் ஒரு பகுதியாக தந்த்ரி புதியமேல்சாந்தியுடன் கலசபிஷேகம் செய்வார். பின்னர் தந்திரி புதிய மேல்சாந்தியை கோயில் நோக்கி அழைத்து சென்று ஐப்பனின் மூலந்திரத் உச்சரிப்பார். நவம்பர் 17ம் தேதி அதிகாலை 4 மணிக்கு சபரிமலை கோயிலை திறந்து மேல்சாந்தியாக தனது கடமையை ஏகே சுதிர் நம்பூதிரி தொடங்குவார்.அடுத்த ஒரு வருடத்திற்கு அவர் மேல்சாந்தியாக பொறுப்பு வகிப்பார்.

புதிய மேல்சாந்தி

புதிய மேல்சாந்தி

மாளிகாபுரம் தேவி கோயிலின் புதிய மேல்சாந்தியாக எம் எஸ் பரமேஸ்வரன் நம்பூதிரியும் நவம்பர் 17 ஆம் தேதி பொறுப்பேற்கவுள்ளார். புதிய மேல்சாந்தியின் நிறுவல் விழா முந்தைய நாள் இரவு 8 மணிக்கு மாளிகாபுரம் கோயிலின் முன் நடைபெற உள்ளது.

இணையதளத்தில் முன்பதிவு

இணையதளத்தில் முன்பதிவு

சபரிமலையில் தரிசனம் செய்ய விரும்புவோர் http://travancoredevaswomboard.org/sabarimala/sabarimala-accommodation என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து ஐயப்பனை தரிசிக்கலாம்.

பினராயி ஆய்வு

பினராயி ஆய்வு

இதனிடையே சபரிமலை புனித யாத்திரை தொயஉடர்பாக முதல்வர் பினராயி விஜயன் சனிக்கிழமை ஆய்வு செய்தார். தேவஸ்வம் அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன், தேவஸ்வம் துறை எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து முதல்வருக்கு விளக்கினார். தொலைதூர இடங்களிலிருந்து வரும் பக்தர்கள் மலைப்பாதையில் இருந்து திரும்பிச் செல்லும் வழியில் ஓய்வெடுக்கும் மிட்வே தங்குமிடங்களை செயல்பாட்டிற்கு கொண்டுவர அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என்றார்.

பேருந்து வசதி

பேருந்து வசதி

சபரிமலையில் 300 சுகாதாரப் பணியாளர்கள் உள்ளனர். பம்பாவிற்கும் நிலக்கலுக்கும் இடையே 210 தினசரி சேவைகளை கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்துகள் இயக்க உள்ளது. இதேபோல் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சபரிமலை நோக்கி 379 புதிய பேருந்து சேவைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

English summary
Sabarimala to open for two-month annual pilgrimage on Nov 16. KSRTC would be operating 210 daily services between Pampa and Nilackal.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X