For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும்: கேரளா முதல்வர் பினராயி விஜயன்

சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்ல அனுமதி அளித்து வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட மறு சீராய்வு மனுக்கள் மீதான தீர்ப்பு இன்று உச்ச நீதிமன்றத்தில் வழங்கப்பட உள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி : சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்ல அனுமதி அளித்து வழங்கப்பட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட மறு சீராய்வு மனுக்கள் 5 நீதிபதிகள் பெஞ்ச்சில் இருந்து 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.

Newest First Oldest First
6:21 PM, 14 Nov

உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும்: கேரளா முதல்வர் பினராயி விஜயன்
10:58 AM, 14 Nov

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் பெஞ்ச்சில் நீதிபதிகள் நாரிமன், சந்திரசூட் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். இதனால் 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது.
10:58 AM, 14 Nov

புதிய தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச்சில் நீதிபதிகள் கன்வில்கர், இந்து மல்கோத்ராவும் இடம்பெறுவர்.
10:51 AM, 14 Nov

உச்சநீதிமன்றம் ஏற்கனவே வழங்கிய தீர்ப்பின்படி தற்போது சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் வழிபட தடை இல்லை
10:49 AM, 14 Nov

சபரிமலை தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்த மறு ஆய்வு மனுக்களை நீதிபதி நாரிமன் தள்ளுபடி செய்தார்
10:46 AM, 14 Nov

சபரிமலை வழக்கு 5 நீதிபதிகள் பெஞ்ச்-ல் இருந்து 7 நீதிபதிகள் பெஞ்சுக்கு மாற்றம்
10:44 AM, 14 Nov

பிற மதவழிபாட்டு இடங்களில் பெண்கள் நுழையும் விவகாரமும் சபரிமலை விவகாரமும் ஒன்றுதான் - தலைமை நீதிபதி கோகாய்
10:42 AM, 14 Nov

தீர்ப்பை வாசிக்க தொடங்கினார் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்
10:36 AM, 14 Nov

சபரிமலை வழக்கு: தீர்ப்பு வழங்கும் நீதிபதிகள் உச்ச நீதிமன்றத்திற்கு வருகை புரிந்துள்ளனர். 5 நீதிபதிகள் அமர்வு இந்த வழக்கில் தீர்ப்பளிக்கிறது
10:31 AM, 14 Nov

சபரிமலை வழக்கு: இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பளிக்கிறது உச்ச நீதிமன்றம்
8:43 AM, 14 Nov

திருவனந்தபுரம்: சபரிமலையில் பாதுகாப்பு அதிகரிப்பு. சபரிமலை கோவில் மறுசீராய்வு வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு. அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு பாதுகாப்பு அதிகாரிப்பு
7:01 PM, 13 Nov

மறுசீராய்வு மனுக்கள் மீதான தீர்ப்பை முன்னிட்டு சபரிமலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
7:01 PM, 13 Nov

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான பெஞ்ச் மறுசீராய்வு மனுக்களை விசாரித்து நாளை தீர்ப்பளிக்க உள்ளது
7:01 PM, 13 Nov

சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என கடந்த ஆண்டு செப்டம்பர் 28-ந் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இத்தீர்ப்புக்கு எதிராக மறுசீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன
7:00 PM, 13 Nov

மறுசீராய்வு மனுக்கள் மீதான தீர்ப்பை முன்னிட்டு சபரிமலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
7:00 PM, 13 Nov

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான பெஞ்ச் மறுசீராய்வு மனுக்களை விசாரித்து நாளை தீர்ப்பளிக்க உள்ளது
7:00 PM, 13 Nov

சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என கடந்த ஆண்டு செப்டம்பர் 28-ந் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இத்தீர்ப்புக்கு எதிராக மறுசீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன
6:39 PM, 13 Nov

திருவனந்தபுரம்

உச்சநீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பை அரசும் திருவிதாங்கூர் தேவசம் போர்டும் நடைமுறைப்படுத்த தயாராக உள்ளது -தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார்
4:17 PM, 13 Nov

சபரிமலை சீராய்வு மனு மீது நாளை காலை 10.30 மணிக்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு
4:17 PM, 13 Nov

5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்குகிறது

Sabarimala Verdict Live Updates
English summary
Sabarimala Verdict Live Updates in tamil: The Supreme Court constitution bench will be delivering the judgment tomorrow morning.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X