For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

30 வருட வழக்கு.. சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் செல்லலாமா, கூடாதா?.. கடந்து வந்த பாதை!

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க கோரிய வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்க இருக்கிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் வழிபட அனுமதி- சுப்ரீம்கோர்ட்- வீடியோ

    டெல்லி: சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டி பல வருடமாக வழக்கு நடந்து வருகிறது. மிக நீண்ட வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட உள்ளது.

    கேரளாவில் உள்ள உலகப் பிரசித்திபெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 வயதிற்கும் குறைவான சிறுமிகளும், 50 வயதிற்கும் அதிகமான பெண்களும் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

    10 முதல் 50 வயது வரை உள்ள பெண்களுக்கு சபரிமலை கோவிலுக்குள் அனுமதிக்க கோரி தொடுக்கப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது. இந்த வழக்கு விசாரணை முப்பது வருடமாக பல்வேறு நீதிமன்றங்களில் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வரலாற்றில் அதிக வருடம் விசாரிக்கப்பட்ட வழக்குகளில் இதுவும் ஒன்று ஆகும்.

    Sabarimala Verdict: The linear timeline for 30 years old case

    • 1991ல் தான் முதல் முதலாக சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று வழக்கு தொடுக்கப்பட்டது. எஸ். மஹாதேவன் என்ற நபர் கேரளா ஹைகோர்ட்டில் இந்த வழக்கை தொடுத்து இருந்தார்.
    • அதே வருடம் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இது மத நம்பிக்கையின் படியும், கேரள கோவில்கள் வகுத்த விதியின் படியும், சபரிமலை தேவஸ்தான விதியின் படியும் இது சரியானது என்று தீர்ப்பளிக்கப்பட்டது.
    • 2006ல் இந்த விவகாரத்தில் ஒரு முக்கியமான சம்பவம் நடந்தது. பிரபல சாமியார் ஒருவர் இந்த கோவிலில் பூஜை நடத்தினார். பூஜைக்கு முடிவில் இந்த கோவிலுக்குள் வயது வந்த பெண் ஒருவர் முன்பு வந்து உள்ளார். அதற்கான அறிகுறி இருக்கிறது என்று கூறினார்.
    • 2006ல் சில மாதங்கள் கழித்து பிரபல கன்னட நடிகை ஜெயமாலா சபரிமலை கோவிலுக்குள் 1987ல் 28 வயது இருக்கும் போது வந்ததாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். படப்பிடிப்பிற்காக வந்ததாகவும், முழு அனுமதியுடன் வந்தேன் என்றும் குறிப்பிட்டார்.
    • 2006ல் இந்த பிரச்சனை பெரிய பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து விசாரிக்க கேரள கிரைம் பிரிவிற்கு உத்தரவு பிறப்பித்தது அம்மாநில அரசு. ஆனால் சில மாதங்களில் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
    • அதே வருடம் இறுதியில் கேரளாவை சேர்ந்த இளம் வழக்கறிஞர்கள் சங்கம் உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்தது. சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று வழக்கு தொடுத்தது.
    • இந்த வழக்கு இரண்டு வருட காத்திருப்பிற்கு மார்ச் 7ம் தேதி 2008ம் ஆண்டு மூன்று நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்விற்கு சென்றது.
    • ஆனால் அதன்பின் ஏழு வருடம் இந்த வழக்கு விசாரிக்கப்படவில்லை. எந்த விதமான முன்னேற்றமும் இல்லாமல் வழக்கு கிடப்பில் போடப்பட்டது.
    • 2016 ஜனவரி 11ம் தேதிதான் மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது.
    • 2017ம் ஆண்டு இந்த வழக்கு பிப்ரவரி மாதம் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு அரசியல் சாசன அமர்விற்கு மாற்றப்பட்டது.
    • தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் நாரிமன், சந்திரசூட், கான்வில்கர், இந்து மல்ஹோத்ரா அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.
    • இந்த வழக்கு விசாரணையில் கடந்த இரண்டு மாதம் முன், கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவிக்க மாட்டோம் என்று அம்மாநில அரசு தெரிவித்தது. ஆனால் கோவில் நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்தது.
    • கடைசியாக சென்ற மாதம் இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்து, இந்த மாத இறுதியில் தீர்ப்பு அளிக்கப்படும் என்று கூறப்பட்டது.
    • இந்த நிலையில் இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட இருக்கிறது.

    English summary
    Sabarimala Verdict: The linear timeline for 30 years old case.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X