For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

என்ன நடந்தாலும் ஆட்சி கவிழாது.. தகுதி நீக்க அஸ்திரத்தை கையில் எடுக்கும் அசோக் கெலாட்.. சச்சின் ஷாக்!

Google Oneindia Tamil News

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் சச்சின் பைலட்டின் துணை முதல்வர் பதவி மற்றும் கட்சி தலைவர் பதவி பறிக்கப்பட்டு இருக்கும் நிலையில், ராஜஸ்தானில் நம்பிக்கை வாக்கெடுப்பு வந்தால், முதல்வர் அசோக் கெலாட் வெற்றிபெற அதிக வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

Recommended Video

    Sachin Pilot has been removed as Rajasthan Deputy Chief Minister

    காங்கிரஸ் கட்சியின் துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார்.ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் மற்றும் துணை முதல்வர் ஆகிய இரண்டு பதவியில் இருந்தும் சச்சின் பைலட் நீக்கப்பட்டு இருக்கிறார் .

    அதேபோல் அங்கு சச்சின் பைலட் ஆதரவு அமைச்சர்கள் 2 பேர் நீக்கப்பட்டு புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டு உள்ளது. முதல்வர் அசோக் கெலாட் ஆட்சிக்கு எதிராக திரும்பியதால் காங்கிரஸ் தலைமை இந்த நடவடிக்கையை எடுத்து இருக்கிறது.

    தலைமை மீது தொடர் விமர்சனம் - கலகக் குரல் சஞ்சய் ஜா காங்கிரஸில் இருந்து அதிரடி சஸ்பெண்ட்! தலைமை மீது தொடர் விமர்சனம் - கலகக் குரல் சஞ்சய் ஜா காங்கிரஸில் இருந்து அதிரடி சஸ்பெண்ட்!

    எத்தனை ஆதரவு

    எத்தனை ஆதரவு

    ராஜஸ்தானில் சச்சின் பைலட்டின் துணை முதல்வர் பதவி மற்றும் கட்சி தலைவர் பதவி பறிக்கப்பட்டு இருக்கும் நிலையில், ராஜஸ்தானில் நம்பிக்கை வாக்கெடுப்பு வந்தால், முதல்வர் அசோக் கெலாட் வெற்றிபெற அதிக வாய்ப்புள்ளது என்கிறார்கள். தற்போது கணக்குப்படி அங்கு காங்கிரஸ் கட்சியில் அசோக் கெலாட் ஆட்சிக்கு 102 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது. சச்சின் பைலட் தரப்பில் அவரையும் சேர்த்து 17 எம்எல்ஏக்கள் உள்ளனர்.

    தகுதி நீக்கம்

    தகுதி நீக்கம்

    சச்சின் பைலட் தரப்பில் அவரையும் சேர்த்து 17 எம்எல்ஏக்கள் உள்ளனர். இந்த 17 பேரும் நம்பிக்கை தீர்மான வாக்கெடுப்பில் ஆட்சிக்கு எதிராக வாக்களித்தால், அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளது. அப்படி இவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டால் அவையின் பலம் 200ல் இருந்து 183 ஆக குறையும். அதன்பின் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய எண்ணிக்கை 92 ஆக குறையும்.

    எம்எல்ஏக்கள் பலமும்

    எம்எல்ஏக்கள் பலமும்

    தற்போது காங்கிரஸ் கட்சியிடம் 102 எம்எல்ஏக்கள் உள்ளனர். இதனால் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் அசோக் கெலாட் எளிதாக நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வெற்றிபெற முடியும். அதிலும் கூட சுயேச்சை மற்றும் மற்ற கட்சிகளின் ஆதரவு இல்லாமலே அவரால் ஆட்சியின் பெரும்பான்மையை நிரூபிக்க முடியும்.

    ஆதரவு பெரிதாக இல்லை

    ஆதரவு பெரிதாக இல்லை

    இதுதான் தற்போது சச்சின் பைலட் தரப்பை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது .ஏனென்றால் தனக்கு எப்படியும் 30 எம்எல்ஏக்கள் ஆதரவு தருவார்கள் என்று சச்சின் பைலட் நினைத்தார். ஆனால் அவருக்கு 17 பேர் மட்டுமே ஆதரவு கொடுத்து உள்ளனர். தற்போது தகுதி நீக்கமும் செய்யப்பட வாய்ப்புள்ளது. இதனால் அவர் அவசரப்பட்டு முடிவு எடுத்து விட்டாரோ என்று பலர் கேள்வி கேட்க தொடங்கி உள்ளனர்.

    தலைமை மீது தொடர் விமர்சனம் - கலகக் குரல் சஞ்சய் ஜா காங்கிரஸில் இருந்து அதிரடி சஸ்பெண்ட்!

    English summary
    Sachin Pilot and his supporters may get disqualified on the trust vote in Rajasthan.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X