For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சரமாரி கேள்வி.. 2 நாள்தான் டைம்.. சச்சின் பைலட் மீது ஏவப்பட்ட தகுதிநீக்க அஸ்திரம்.. காங்கிரஸ் அதிரடி

Google Oneindia Tamil News

ஜெய்ப்பூர்: சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் காங்கிரஸ் தலைமையிடம் உரிய விளக்கம் அளிக்கவில்லை என்றால் உடனே தகுதி நீக்கம் செய்யப்படுவீர்கள் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

ராஜஸ்தான் அரசியல் தற்போது உச்சகட்ட பரபரப்பில் சென்று கொண்டு இருக்கிறது. அங்கு இன்னும் சச்சின் பைலட் மற்றும் முதல்வர் அசோக் கெலாட் இடையிலான மோதல் முடிவிற்கு வரவில்லை. காங்கிரஸ் இதுவரை இரண்டு முறை நடத்திய எம்எல்ஏக்கள் மீட்டிங் எதிலும் சச்சின் பைலட் கலந்து கொள்ளவில்லை.

தற்போது சச்சின் துணை முதல்வர் பதவி மற்றும் ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் பதவி இரண்டும் பறிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் இவருக்கு ஆதரவாக இருந்த 2 அமைச்சர்களின் பதவி பறிக்கப்பட்டு அமைச்சரவையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தலைவராக ராகுல் இல்லை... எனக்கு நெருக்கடியும் அதிகரித்தது... மனம் திறந்த சச்சின் பைலட்!! தலைவராக ராகுல் இல்லை... எனக்கு நெருக்கடியும் அதிகரித்தது... மனம் திறந்த சச்சின் பைலட்!!

தகுதி நீக்கம்

தகுதி நீக்கம்

இந்த நிலையில் சச்சின் பைலட் மற்றும் அவரின் 16 ஆதரவு எம்எல்ஏக்கள் என்று 17 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக கோரி இவர்களுக்கு சட்டசபை தலைவர் கொறடா அனுப்பி இருக்கிறார். அதன்படி காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் மீட்டிங் இரண்டையும் புறக்கணித்தது தொடர்பாக அவர்களிடம் விளக்கம். மீட்டிங்கில் ஏன் கலந்து கொள்ளவில்லை என்று அதில் கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

சரமாரி கேள்விகள்

சரமாரி கேள்விகள்

அதேபோல் விப் நோட்டீஸ் அனுப்பியும் ஏன் மீட்டிங் வரவில்லை. எம்எல்ஏக்கள் ஆதரவு கடிதம் கேட்டபோது ஏன் அதை மதிக்கவில்லை. விப் நோட்டீசை மீறியதற்காக உங்கள் மீது கட்சி ஒழுங்கு மீறல் நடவடிக்கை எடுக்கலாமா? எம்எல்ஏக்கள் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யலாமா என்று கேள்வி எழுப்பி உள்ளனர். இந்த கேள்விக்கு எல்லாம் 2 நாட்களில், அதாவது வெள்ளி கிழமை காலைக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

முடிவு எடுத்துவிட்டார்

முடிவு எடுத்துவிட்டார்

இதனால் சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய காங்கிரஸ் முடிவு செய்துவிட்டது என்று கூறுகிறார்கள். தற்போது கணக்குப்படி அங்கு காங்கிரஸ் கட்சியில் அசோக் கெலாட் ஆட்சிக்கு 100 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது. சச்சின் பைலட் தரப்பில் அவரையும் சேர்த்து 17 எம்எல்ஏக்கள் உள்ளனர்.

இந்த 17 பேரும் நம்பிக்கை தீர்மான வாக்கெடுப்பில் ஆட்சிக்கு எதிராக வாக்களித்தால், அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளது.

என்ன நிலை

என்ன நிலை

அப்படி இவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டால் அவையின் பலம் 200ல் இருந்து 183 ஆக குறையும். அதன்பின் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய எண்ணிக்கை 92 ஆக குறையும். தற்போது காங்கிரஸ் கட்சியிடம் 100 எம்எல்ஏக்கள் உள்ளனர். இதனால் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் அசோக் கெலாட் எளிதாக நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வெற்றிபெற முடியும்.

English summary
Sachin Pilot and his supporters should reply the notice are will be disqualified says Congress.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X