For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சச்சின் பைலட்டின் கை ஓங்குகிறது.. அவினாஷ் பாண்டே நீக்கம்.. ராஜஸ்தானில் திருப்பம்

Google Oneindia Tamil News

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து அவினாஷ் பாண்டே நீக்கப்பட்டுள்ளார். மூத்த காங்கிரஸ் தலைவர் அஜய் மாக்கன் அம்மாநிலத்தின் காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் சச்சின் பைலட்டின் கோரிக்கை நிறைவேறியுள்ளது.

அந்த உத்தரவில் "அவினாஷ் பாண்டேவின் பங்களிப்பை கட்சி முழு மனதுடன் பாராட்டுகிறது" என்று கூறப்பட்டுள்ளது. மேலும் அந்த உத்தரவில், "ராஜஸ்தானில் சமீபத்திய பிரச்சினைகள் சீராக தீர்க்கப்படுவதை மேற்பார்வையிடவும் பின்பற்றவும்" மூன்று உறுப்பினர்களைக் கொண்ட குழுவையும் காங்கிரஸ் உருவாக்கியுள்ளது.

இந்த குழுவின் உறுப்பினர்கள் அகமது படேல் (குஜராத்தைச் சேர்ந்த மாநிலங்களவை எம்.பி.), அஜய் மாக்கென் (ராஜஸ்தானின் பொதுச் செயலாளர்) மற்றும் கே.சி.வேணுகோபால் (ராஜஸ்தானிலிருந்து மாநிலங்களவை எம்.பி.). இருப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வெறுப்பு பேச்சு.. இந்தியாவில் பாஜகவிற்கு ஆதரவாக செயல்படும் பேஸ்புக்.. வால் ஸ்டிரீட் ஜர்னல் கட்டுரை!வெறுப்பு பேச்சு.. இந்தியாவில் பாஜகவிற்கு ஆதரவாக செயல்படும் பேஸ்புக்.. வால் ஸ்டிரீட் ஜர்னல் கட்டுரை!

குறைகளை நீக்க குழு

குறைகளை நீக்க குழு

முன்னதாக ராஜஸ்தானின் பொதுச் செயலாளர் அவினாஷ் பாண்டே நீக்கப்பட வேண்டும், சட்டமன்ற உறுப்பினர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய ஒரு குழுவை அமைக்க வேண்டும் என காங்கிரஸ் தலைமைக்கு முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் கோரிக்கைகளை முன்வைத்திருந்தார். இதன் அடிப்படையில் தற்போது காங்கிரஸ் தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது.

அஜய் மாக்கன் பொறுப்பு

அஜய் மாக்கன் பொறுப்பு

இதன்படி ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து அவினாஷ் பாண்டே நீக்கப்பட்டுள்ளார். மூத்த காங்கிரஸ் தலைவர் அஜய் மாக்கன் அம்மாநிலத்தின் காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஒரு மாதம் முகாம்

ஒரு மாதம் முகாம்

முன்னதாக சச்சின் பைலைட் அசோக் கெலாட்டுக்கு எதிராக கிளர்ச்சி செய்து ஜெய்ப்பூரிலிருந்து ஹரியானாவின் மானேசரில் உள்ள ஒரு ரிசார்ட்டுக்கு 18 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் புறப்பட்ட கிட்டத்தட்ட ஒரு மாதம் முகாமிட்டார். இதையடுத்து சச்சின் பைலட் துணை முதல்வர் பதவியில் இருந்தும், ராஜஸ்தான் பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் (ஆர்.பி.சி.சி) தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

நம்பிக்கை வாக்கெடுப்பு

நம்பிக்கை வாக்கெடுப்பு

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால கட்சித் தலைவர் சோனியா காந்தி மற்றும் உயர் மட்ட தலைமையின் முன் தனது கோரிக்கைகளை முன்வைத்த பின்னர் சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் மீண்டும் கட்சியுடன் இணைந்தனர். இதனால் முதல்வர் அசோக் கெலாட்க்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் ஆகஸ்ட் 14 அன்று ராஜஸ்தான் சட்டமன்றத்தில் தோற்கடிக்கடிக்கப்பட்டது. ராஜஸ்தான் சட்டசபை ஆகஸ்ட் 21 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

English summary
congress accepts Two demands made by Sachin Pilot . Congress sacks Rajasthan in-charge Avinash Pande, forms 3-member committee
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X