For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

செல்பி எடுக்க முயன்ற ரசிகர்கள்.. ஹெல்மெட் அணியுமாறு வலியுறுத்திய 'கடவுள்'!

ஆந்திராவில் செல்பி எடுக்க முயன்ற ரசிகர்களிடம் சச்சின் டெண்டுல்கர் ஹெல்மட் அணியுறுமாறு வலியுறுத்தினார்.

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: ஆந்திராவில் காரில் சென்ற சச்சின் டெண்டுல்கரை சாலையில் பார்த்த இளைஞர்கள் அவருடன் செல்பி எடுக்க முயன்றனர். அதற்கு ஒப்புக்கொண்ட சச்சின் அவர்களை ஹெல்மட் அணியுமாறு வலியுறுத்தினார். அந்த வீடியோவையும் தனது டிவிட்டர் பக்கத்தில் சச்சின் வெளியிட்டுள்ளார்.

ஐபிஎல் 10வது சீசன் ஹைதராபாத்தில் கடந்த புதன் கிழமை தொடங்கியது. இதன் தொடக்க விழாவில் சச்சின் டெண்டுல்கல், கங்குலி, ஷேவாக், விவிஎஸ் லஷ்மண் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது ஆந்திராவில் சச்சின் டெண்டுல்கர் காரில் சென்றார். அப்போது சாலையில் அவரைக் கண்ட இளைஞர்கள் செல்பி எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

Sachin tendulkar urges youths to wear helmet

இதற்கு ஒப்புக்கொண்ட சச்சின், காரின் கண்ணாடியை இறக்கி செல்பிக்கு போஸ் கொடுத்தார். அப்போது இருசக்கர வாகனங்களில் செல்லும் இளைஞர்கள் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என அவர் வலியுறுத்தினார். அவர் வலியுறுத்தும் வீடியோவையும் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் சச்சின்.

ஹெல்மெட் அணிவது அனைத்தையும் விட முதன்மையானது என்றும் ஹெல்மெட் இல்லாமல் இருசக்கர வாகனம் ஓட்ட வேண்டாம் என்றும் அவர் அந்த இளைஞர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கிரிக்கெட்டின் கடவுள் என அழைப்படும் சச்சினுடன் எடுத்துக்கொண்ட செல்பியை இளைஞர்கள் சமூக வலைதளங்களில் தட்டிவிட்டு புலகாங்கிதம் அடைந்து வருகின்றனர்.

English summary
Sachin tendulkar urges youths to wear helmet while riding a bike when they tried to take sefie with him.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X