For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சச்சினை அவுட்டாக்கிய காங்., பதிலடியாக சோஷியல் மீடியாவில் சிக்சர் விளாசிய மாஸ்டர் பிளாஸ்டர்

நாடாளுமன்றத்தில் சச்சின் பேச இருந்த நிலையில் அவை ஒத்தி வைக்கப்பட்டதால், தனது கன்னிப்பேச்சை வீடியோ மூலம் சமூக வலைதளத்தில் சச்சின் பதிவு செய்துள்ளார்.

By Dakshinamurthy
Google Oneindia Tamil News

Recommended Video

    சோஷியல் மீடியாவில் சிக்சர் விளாசிய மாஸ்டர் பிளாஸ்டர்- வீடியோ

    டெல்லி: மன்மோகன்சிங்கை விமர்சித்த விவகாரம் மற்றும் 2ஜி வழக்கு தீர்ப்பு உள்ளிட்ட பிரச்சனைகளால் இரு அவைகளிலும் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் சச்சினின் பேச்சு தடைப்பட்டது.

    குஜராத் தேர்தல் பிரச்சாரத்தின் போது மோடி மன்மோகன் சிங்கை விமர்சித்ததாகவும், 2ஜி வழக்கு தொடர்பாகவும் மக்களவை மற்றும் மாநிலங்களைவையில் நேற்று காங்கிரஸ் எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.

    இதனைத் தொடர்ந்து மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது. தொலைகாட்சியின் நேரடி ஒளிபரப்பும் நிறுத்தப்பட்டது.

     சோஷியல் மீடியா

    சோஷியல் மீடியா

    நேற்று மதியம் 2 மணியளவில் பேசுவதாக இருந்த சச்சினின் நாடாளுமன்ற கன்னிப்பேச்சு தடைப்பட்டது. இதனால் மனம் தளராத சச்சின், தான் நாடாளுமன்றத்தில் பேசுவதாக இருந்த பேச்சை வீடியோவாக எடுத்து தனது பேஸ்புக் மற்றும் டிவிட்டர் பக்கங்களில் வெளியிட்டார்.

     விளையாட்டு துறை

    விளையாட்டு துறை

    விளையாட்டின் முக்கியத்துவமும், இந்தியாவில் விளையாட்டுத்துறை அடைய வேண்டிய உச்சம் குறித்து அந்த வீடியோவில் பேசியுள்ள சச்சின் அனைத்து இளைஞர்களும் விளையாட்டுத்துறையில் சாதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

     வைரலாகும் வீடியோ

    வைரலாகும் வீடியோ

    சச்சினின் இந்த 15 நிமிட வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் இளைஞர்களிடையே வைரலாகி வருகிறது. நாடாளுமன்றத்தில் சச்சினை பேச விடாமல் செய்தது மிகவும் வெட்கப்பட வேண்டிய விஷயம் என்றும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

     வருகை பதிவு

    வருகை பதிவு

    சச்சின் காங்கிரஸ் கட்சி சார்பில் எம்.பியாக்கப்பட்டவர். எனினும் அவரது வருகை பதிவு மிகவும் குறைவாக உள்ளதாக விமர்சனங்கள் எழுவது உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Sachin video is going viral after his parliament speech has been ducked by the congress mps. He released a 15min video in which he urges youngsters to concentrate in sports and he adds that it will make india shine.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X