For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'சந்திரயான் 2' நிகழ்வில் கவனிச்சீங்களா.. விஞ்ஞானிகளுடன் சாமியார் ஜக்கி வாசுதேவ்

Google Oneindia Tamil News

Recommended Video

    Chandrayaan 2 | சந்திராயன் 2 விண்கலத்துடன் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி ராக்கெட்!- வீடியோ

    ஸ்ரீகரிகோட்டா: நிலவின் தென்துருவத்தை ஆராய 'சந்திரயான் 2' அனுப்பிக்கொண்டிருந்த விஞ்ஞானிகளுடன் ஈஷா மைய நிறுவனர் சாமியர் ஜக்கி வாசுதேவ்வும் உடன் இருந்தார்.

    உலகில் எந்த நாடு செய்யாத ஒரு முயற்சியான நிலவின் தென்துருவ பகுதியை ஆராய்ச்சி செய்யும் முயற்சியை இந்தியா இன்று வெற்றிகரமாக தொடங்கியுள்ளது.

    sadhguru jaggi vasudev on chandrayaan 2 launching stage

    சந்திரயான்2 விண்கலத்தை இன்று ஆந்திராவின் ஸ்ரீஹரிகோர்ட்டாவில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ இன்று ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தியது.

    இந்த விண்கலம் புவிவட்ட பாதைக்குள் வெற்றிகரமாக நுழைந்தது. திட்டமிட்டபடி செப்டம்பர் 7ம் தேதி சந்திரயான் 2 விண்கலம் நிலவினை அடைந்து ஆராய்ச்சியை மேற்கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த வரலாற்று சிறப்பு மிக்க பணிகளை இரவு பகல் பாராமல் விஞ்ஞானிகள் மேற்கொண்டனர். இந்த விஞ்ஞானிகள் குழுவினருடன் ஈஸா யோகா மைய நிறுவனரும், பிரபல சாமியாருமான ஜாக்கி வாசுதேவும் உடன் இருந்தார். இவர் ஸ்ரீஹரிகோட்டாவில் விஞ்ஞானிகளை உற்சாகப்படுத்துவதற்காக சென்று இருக்கலாம் என தெரிகிறது. இந்த சந்திரயான் 2 விண்ணில் பாயும் நிகழ்வை காண ஸ்ரீஹரிகோட்டாவிற்கு சென்ற ஏராளனமான பொதுமக்களும், ஆர்வமுடன் கண்டுகளித்தனர்.

    இதனிடையே ஜாக்கி வாசுதேவ் சந்திரயான்2 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டிருப்பதற்காக வெளியிட்டுள்ள வாழ்த்தில் "சந்திரயான் 2 என்பது நமது இஸ்ரோ விஞ்ஞானிகளின் புத்திசாலித்தனம் மற்றும் அசாதாரண அர்ப்பணிப்பு மற்றும் அரசின் விருப்பத்தின் விளைவு ஆகும். இந்த அற்புதமான சாதனை நமது தேசத்தின் பெருமை. அங்கு இருப்பதற்கு உதவ முடியவில்லை. ஒரு பெரிய பாக்கியம். உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்" இவ்வாறு கூறியுள்ளார்.

    English summary
    isha yoga founder sadhguru jaggi vasudev on chandrayaan 2 launching stage, he wishes our scientists at twiter
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X