For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வீட்டுக்காவல் கோரிய 'சஹாரா' சுப்ரதா ராய் மனு தள்ளுபடி

By Mathi
Google Oneindia Tamil News

Sahara chief Subrata Roy to stay in jail as SC dismisses plea for house arrest
டெல்லி: தம்மை வீட்டுக் காவலில் வைக்க கோரிய மோசடி நிறுவனமான சஹாரா குழுமத்தின் தலைவர் சுப்ரதா ராயின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

சஹாரா குழுமத் தலைவர் சுப்ரதா ராய், முதலீட்டாளர்களின் ரூ.20 ஆயிரம் கோடி பணத்தை திருப்பி கொடுக்கவில்லை என்பது புகார். இந்த புகாரின் அடிப்படையில் உ.பி. போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் ஜாமீன் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

சுப்ரதா ராயை ஜாமீனில் விட ரூ.10 ஆயிரம் கோடி தர உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் சஹாரா குழுமம் அவ்வளவு தொகையை செலுத்த முடியாது என்று கூறிவிட்டது.

இந்நிலையில் சஹாரா குழுமத்தில் உள்ள அசையா சொத்துக்களை விற்க வேண்டுமென்றால் சுப்ரதா ராயை வீட்டுக்காவலில் வைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை வீசாரித்த உச்சநீதிமன்றம், அசையா சொத்துக்களை விற்றுக்கொள்ளலாம். ஆனால் சுப்ரதா ராய்க்கு வீட்டுக்காவல் வழங்க முடியாது என்று கூறி அந்த மனுவை தள்ளுபடி செய்தது. இதனால் சுப்ரதா ராய் தொடர்ந்தும் சிறையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

English summary
Sahara chief Subrata Roy will continue to remain in jail as the Supreme Court on Wednesday dismissed his plea that he be put under house arrest.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X