For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருப்பதி ஏழுமலையானுக்கு 33 கிலோ தங்க காசு மாலை

By Mayura Akilan
Google Oneindia Tamil News

திருமலை ஏழுமலையானுக்கு ரூ.11 கோடி செலவில் 33 கிலோ தங்க காசுமாலையை காணிக்கையாக வழங்க பக்தர் ஒருவர் முன்வந்துள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருமலை - திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டம் திருமலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்குப் பிறகு அறங்காவலர் குழு தலைவர் பாபிராஜு கூறியதாவது:

Sahasra Nama Kasula Mala to Lord Venkateswara with 33 kg gold

திருமலை திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்காக முள்ள குண்டா என்ற இடத்தில் ரூ.50 கோடியில் புதிய கார் பார்கிங் கட்டப்படும்.

ஏழுமலையானுக்கு ரூ.11 கோடி செலவில் 33 கிலோ தங்க காசுமாலையை காணிக்கையாக வழங்க பக்தர் ஒருவர் முன்வந்துள்ளார். இதனை ஏற்றுக்கொள்வது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

மேலும், ரூ.64 லட்சம் செலவில் கல்யாண வெங்கடேஸ்வரருக்கு தங்கலட்சுமி கவசம் செய்யப்படும். திருச்சானூரில், ரூ.5 கோடி யில் புதிய அன்னதான சத்திரம் கட்டப்படும்.

பக்தர் களின் காணிக்கை முடிகளுக்காக அலிபிரி மலையடிவாரத்தில் ரூ.6 கோடியில் கிடங்கு கட்டப்பட்டும்

சித்தூர் மாவட்டம் பீலேர் அருகே ரூ.65 லட்சம் செலவில் ஏழுமலையான் மாதிரி கோயில் கட்டப்பட்டும் என்றார் அவர்.

English summary
Building a spacious car parking complex at a cost of Rs 50 crore near Mullakunta and making of new Sahasra Nama Kasula Mala to Lord Venkateswara with 33 kg gold are some of the key decisions taken by the Tirumala Tirupati Devasthanam (TTD) board.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X