For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சாய்பாபா கடவுளில்லை… அவருக்கு கோவில் கட்டக்கூடாது: துவாரகாபீட சங்கராச்சாரியார்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Sai Baba's temples should not be built: Shankaracharya
மும்பை: சாய்பாபா கடவுள் அவதாரமல்ல... அவர் மனிதர்தான், எனவே அவருக்கு கோவில் கட்டவேண்டிய அவசியமில்லை என்று துவாரகாபீட சங்கராச்சாரியார் சுவாமி சொரூபானந்த் சர்ச்சைக்குரிய கருத்தினை கூறியுள்ளார்.

சாயிபாபாவை கடவுளாக வழிபடுபவர்கள் ஏராளமானோர் உள்ளனர். நாடுமுழுவதும் அவருக்கு பல நகரங்களில் ஆலயங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்களின் மனதை புண்படுத்தும் வகையில் சங்கராச்சாரியார் கருத்தினை கூறியுள்ளார்.

இந்து - முஸ்லீம் ஒற்றுமையை உணர்த்தும்வகையில் சாய்பாபா பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளதாக கூறுகின்றனர். ஆனால் இந்துக்களுக்கு சாய்பாபா தேவையில்லை என்றும் சங்கராச்சாரியார் கூறியுள்ளார்.

சனாதன தர்மத்தில் கடவுள் விஷ்ணுவின் அவதாரம் பற்றி கூறப்பட்டுள்ளது. கலியுகத்தில் விஷ்ணு கல்கி அவதாரம் எடுப்பார் என்று கூறப்பட்டுள்ளது.

எனவே சாய்பாபா கண்டிப்பாக கடவுள் அவதாரம் கிடையாது என்றும் கூறியுள்ளார். அவர் மாமிசம் சாப்பிடமாட்டார். அவரை குருவாக ஏற்றுக்கொள்வதில் தவறில்லை. ஆனால் கடவுளாக கொண்டாடக்கூடாது என்றும் சங்கராச்சாரியார் கூறியுள்ளார்.

சங்கராச்சாரியாருக்கு கோவில் கட்டுவது அவசியமற்ற ஒன்று என்றும் அவர் கூறியுள்ளார். அவரது இந்த கருத்து சாய்பாபா பக்தர்களிடையை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

English summary
In a statement that could hurt sentiments of the followers of Sai Baba, Dwarakapeeth Shankaracharya Swami Swaroopanand said that worshipping the saint was a conspiracy to divide Hindus. Sai Baba should not be worshipped as he was a human being and not a God, said Swaroopanand, adding his temples should not be built.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X