For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சேலம் சாலை பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.. நிதின் கட்கரியிடம் தமிழிசை கோரிக்கை

சேலம் 8 வழிச்சாலை போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கோரிக்கை வைத்துள்ளார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

டெல்லி: சேலம் 8 வழிச்சாலை போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கோரிக்கை வைத்துள்ளார்.

சேலம் - சென்னை இடையே புதிதாக போடப்பட உள்ள 8 வழி சாலைக்கு எதிராக மக்கள் போராடி வருகிறார்கள். ஆளும்கட்சி, பாஜகவை தவிர மற்ற கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மத்திய மாநில அரசுகள் இந்த திட்டத்தை எப்படியாவது நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளது.

Salem 8 way: Government should spread awareness about the project Tamizhisai asks Nitin Gadkari

இந்த நிலையில் சேலம் சாலை குறித்து ஆலோசிக்க மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சந்தித்தார். நிதின் கட்கரியை சந்தித்த பின் தமிழிசை பேட்டி அளித்தார்.

சேலம் 8 வழிச்சாலை பற்றி போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மக்களுக்கு இதில் போதிய விழிப்புணர்வு இல்லை. போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த நிதின் கட்கரியிடம் கோரிக்கை வைத்தேன்.

8 வழிச்சாலை பற்றி அமைச்சர் நிதின் கட்கரியுடன் ஆலோசனை நடத்தினேன். திட்டத்துக்காக எங்கேயும் மலைகள் குடையப்படாது. மக்களுக்கு சரியான இழப்பீடு வழங்கப்படும் என்று அமைச்சர் உறுதியளித்தார்.

8 வழிச்சாலை திட்டம் குறித்து தவறான தகவல் பரப்பப்படுகிறது. மக்களுக்கு இந்த சாலையின் பயன் தெரியவில்லை. இந்த சாலையின் பயன் குறித்து விளக்கப்படும் என்றுள்ளார்.

English summary
Salem- Chennai 8 way: Government should spread awareness about the project Tamizhisai asks Nitin Gadkari.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X