For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சல்மான் கான் கார் விபத்து: பைல் எல்லாம் தீயில் கருகிப்போச்சு… மராட்டிய அரசின் அசால்ட் பதில்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

மும்பை: நடிகர் சல்மான் கானின் கார் மோதி நடைபாதையில் உறங்கியவர் இறந்த வழக்கு தொடர்பான பைல்கள் தீயில் எறிந்து நாசம் அடைந்து விட்டதாக மகாராஷ்டிர அரசு அதிர்ச்சிகரமான தகவல் அளித்துள்ளது.

கடந்த 2002ம் ஆண்டு செப்டம்பர் 28 ம் தேதி அன்று, நடிகர் சல்மான் கான் மது போதையில் தனது காரை மிகவேகமாக ஓட்டிச் சென்றதில், நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்த 5 பேர் மீது ஏறியது. இதில், ஒருவர் இறந்தார். 4 பேர் படுகாயமடைந்தனர்.

இது குறித்து, மும்பை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், இந்த வழக்கின் இறுதியில் கடந்த மே 6ஆமு தேதி நடிகர் சல்மான் கானுக்கு, மும்பை செஷன்ஸ் நீதிமன்றம் 5 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது. ஆனால், கானுக்கு மும்பை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

தகவல் அறியும் உரிமைச் சட்டம்

தகவல் அறியும் உரிமைச் சட்டம்

'சல்மான் கான் கார் மோதி, ஒருவர் இறந்த வழக்கு தொடர்பான பைல்களை தர வேண்டும்' எனக்கோரி, தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், சமூக ஆர்வலர் மன்சூர் தர்வேஷ் என்பவர், மகாராஷ்டிர அரசிடம் கோரிக்கை விடுத்தார். அத்துடன், சல்மான் கான் வழக்கிற்காக, மாநில அரசால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர்கள், சொலிசிட்டர்கள், சட்ட ஆலோசகர்கள், அரசு வழக்கறிஞர்கள் எத்தனை பேர் என்பது குறித்த விவரங்களையும் தெரிவிக்க வேண்டும் என, கேட்டிருந்தார்.

தீயில் எரிஞ்சு போச்சே

தீயில் எரிஞ்சு போச்சே

இதற்கு, மகாராஷ்டிர அரசு அளித்துள்ள பதில்: மகாராஷ்டிர தலைமைச் செயலகமான மந்திராலயாவில், 2012 ஜூன் 21ம் தேதி, ஏற்பட்ட தீ விபத்தில், சல்மான் கான் தொடர்பான பைல்கள் எல்லாம் அழிந்து விட்டதாக கூறியுள்ளது.

வக்கீல் சம்பளம்

வக்கீல் சம்பளம்

சல்மான் வழக்கில், அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞருக்கு, நாள் ஒன்றுக்கு, 6,000 ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டு உள்ளது. இவ்வாறு, மகாராஷ்டிர அரசு தெரிவித்து உள்ளது.

எதுவும் நடக்கலை

எதுவும் நடக்கலை

அழிந்து போன ஆவணங்களை புதிதாக தயாரிக்க முடிவு செய்திருப்பதாகவும் மகாராஷ்டிரா அரசு கூறியது. ஆனால் எத்தனையோ நாளாகிவிட்டது. இன்னமும் அதற்கான முதற்கட்ட பணிகளைக் கூட தொடங்கவில்லை மராட்டிய அரசு என்றும் சமூக ஆர்வலர் கூறியுள்ளார்.

அசால்ட் பதில்

அசால்ட் பதில்

மிக முக்கியமான வழக்கின் ஆவணங்களைக் கூட பாதுகாக்க முடியாமல் தீயில் கருகிவிட்டதாக அசால்டாக பதிலளித்துள்ளது மகாராஷ்ரா அரசு. இந்த பதில் சமூக ஆர்வலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

English summary
The Maharashtra government’s home and law & judiciary departments do not have any records pertaining to the Salman Khan Accident case of September 28, 2002, an activist said here on Wednesday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X