For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நாளைதான் ஜாமீன் மனு மீது விசாரணை.. ஜோத்பூர் சிறையில் அடைக்கப்படுகிறார் சல்மான்கான்

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: சல்மான்கான் இன்று ஜோத்பூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்படுகிறார். ஜாமீன் மனு மீது நாளை விசாரணை நடைபெறுகிறது.

1998ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அருகே உள்ள கான்களி கிராமத்தில் "ஹம் சாத் சாத் ஹயன்" என்ற ஹிந்தி படத்தின் படப்பிடிப்பு நடந்தது. படப்பிடிப்பில் இருந்த நடிகர் சல்மான்கான் அன்று இரவு அரிய வகை மான்களை வேட்டையாடியதாக குற்றம் சாட்டப்பட்டது. மான்களை நடிகர் சல்மான்கான் சுட்டுக்கொன்றது பற்றி ஜோத்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

Salman Khan has to spend Thursday night in Jodhpur Central Jail

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியானது. சல்மான்கான் குற்றவாளி என தீர்ப்பளித்த நீதிமன்றம், 5 வருடங்கள் சல்மான்கானுக்கு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

சல்மான் கானின் ஜாமீன் மனுவை செஷன்ஸ் நீதிமன்றம், வெள்ளிக்கிழமை விசாரிக்க திட்டமிட்டுள்ளது. எனவே ஜோத்பூர் மத்திய சிறைச்சாலையில் வியாழக்கிழமை இரவு சல்மான்கான் செலவிட வேண்டியுள்ளது.

சல்மான் கானுக்கு இக்குற்றத்திற்கான, அதிகபட்ச தண்டனையாக ஆறு ஆண்டுகள் விதிக்க அரசு தரப்பில் கோரிக்கைவிடுக்கப்பட்டு வாதிடப்பட்டது. ஆனால் சல்மானின் வழக்கறிஞர்கள் குறைந்தபட்ச தண்டனை விதிக்க கேட்டுக்கொண்டதால் 5 வருட சிறை தண்டனையை கோர்ட் விதித்துள்ளதாக கூறப்படுகிறது.

மூன்று வருடங்களுக்கு குறைவாக சல்மான் தண்டனை பெற்றிருந்தால், அவருக்கு உடனடியாக ஜாமீன் வழங்கப்பட்டிருக்கலாம், மேலும் நீதிமன்றத்தில் ஒரு மாதத்திற்குள், மேல் முறையீடு செய்ய அவருக்கு வாய்ப்பு கிடைத்திருக்கும். எனினும், அவருக்கு மூன்று ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை வழங்கப்பட்டதால், சல்மான்கானை காவலில் எடுத்து ஜோத்பூர் மத்திய சிறைக்கு கொண்டு சென்றுள்ளது காவல்துறை.

English summary
Salman Khan's bail application in the Sessions Court is scheduled to be heard on Friday morning, which means he has to spend Thursday night in Jodhpur Central Jail.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X