For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

யாகூப் மேமன் பற்றி ட்விட்டரில் சர்ச்சை கருத்து… நீக்கிய சல்மான்: நிபந்தனையற்ற மன்னிப்பு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

மும்பை: யாகூப் மேமன் அப்பாவி என்று அவருக்கு மரண தண்டனை தரக்கூடாது அவரது சகோதரர் டைகர் மேமனை பிடித்து தூக்கில் போடுங்கள் என்றும் ட்விட்டரில் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்ட நடிகர் சல்மான் கான், அந்தக் கருத்துகளை நீக்கியுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் கொந்தளிப்பை ஏற்படுத்தியதோடு ஏராளமானோர் சல்மான்கான் வீட்டு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து இந்த முடிவை எடுத்த சல்மான்கான், தனது கருத்துக்கு நிபந்தனையற்ற மன்னிப்பும் கோரியுள்ளார்.

1993 மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கு குற்றவாளியான யாகூப் மேமனுக்கு இம்மாதம் 30ம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், நடிகர் சல்மான் கான் ட்விட்டரில் யாகூப் மேமன் தொடர்பாக தெரிவித்த கருத்துகள் பெரும் சர்ச்சைகளைக் கிளப்பின.

அப்பாவியை கொல்வதா?

அப்பாவியை கொல்வதா?

டைகர் மேமனைப் பிடித்துத் தூக்கிலிடுங்கள். அவருக்கு பதிலாக அவரது சகோதரருக்கு தண்டனை வழங்காதீர்கள். ஒரு அப்பாவியை கொல்வது ஒட்டுமொத்த மனிதநேயத்தையும் கொல்வதற்கு சமம் என்று சல்மான் கான் பதிவிட்டிருந்தார்.

கிளம்பிய சர்ச்சை

கிளம்பிய சர்ச்சை

சல்மான் கான் தெரிவித்த கருத்துகளுக்கு பல்வேறு கட்சிகளும் கண்டனம் தெரிவித்தன. ட்விட்டரில் விவாதமும் சர்ச்சைகளும் வெடித்தன. சல்மான் கான் நீதித்துறையை அவமதிப்பதாக பலரும் கருத்து வெளியிட்டனர்.

நீக்கிய சல்மான் கான்

சர்ச்சைக்குரிய ட்வீட்களை நீக்கிய சல்மான் புதிய விளக்கத்தையும் ட்விட்டரில் வெளியிட்டார். அதில், "டைகர் மேமன் தனது குற்றங்களுக்காக தூக்கிலடப்பட வேண்டும் என்று ட்விட்டரில் கருத்து வெளியிட்டிருந்தேன். அந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. அவருக்காக அவரது யாகூப் மேமன் தூக்கிலடப்படக் கூடாது என்றும் கூறியிருந்தேன்.

பல்டியடித்த சல்மான் கான்

யாகூப் மேமனை அப்பாவி என்று நான் சொல்லவில்லை. நம் நாட்டின் நீதித்துறை மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.

தந்தை சொன்னதால் நீக்கம்

நான் முன்பு இட்ட பதிவுகள் தவறாகப் புரிந்துகொள்ளப்படக் கூடிய தன்மை உடையது என்பதால் அவற்றை அழித்துவிட வேண்டும் என்று என்னை என் தந்தை கேட்டுக்கொண்டார். அதன்படி, அந்த ட்வீட் கருத்துகளைத் திரும்பப் பெற்றுக்கொள்கிறேன்.

நிபந்தனையற்ற மன்னிப்பு

எந்தவித உள்நோக்கமும் இல்லை என்ற காரணத்தினால், தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட அந்தக் கருத்துகளுக்காக நிபந்தனையற்ற மன்னிப்புக் கோருகிறேன்.

மத நம்பிக்கை உள்ளது

அதேநேரத்தில், என்னுடைய ட்விட்டர் பதிவுகள், மதத்துக்கு எதிரானவை என்று சொல்பவர்களைக் கடுமையாகக் கண்டிருக்கிறேன். எல்லா மத நம்பிக்கைகளையும் நான் எப்போதும் மதிப்பவன்" என்று சல்மான் கான் விளக்கம் அளித்துள்ளார்.

அப்பாவியின் உயிர்

மும்பை குண்டுவெடிப்புகளில் பல உயிர்களை நாம் இழந்தோம். ஓர் அப்பாவியின் உயிரைப் பறிப்பது என்பது ஒட்டுமொத்த மனிதத்துக்கும் இழப்பு என்று நான் மீண்டும் மீண்டும் சொல்லி வருகிறேன்" என்று கூறியுள்ளார் சல்மான் கான்.

English summary
Salman khan said, I would like to unconditionally apologise for any misunderstanding I may have created unintentionally. My dad called & said I should retract my tweets as they have the potential to create misunderstanding. I hereby retract them
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X