For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பஜ்ரங்கி பாய்ஜான் 2ல் சல்மான் மோடியை இந்தியா அழைத்து வருவார்: ராஜ் தாக்கரே கிண்டல்

By Siva
Google Oneindia Tamil News

மும்பை: சல்மான் கானின் பஜ்ரங்கி பாய்ஜான் 2 படத்தில் அவர் பிரதமர் மோடியை வெளிநாட்டில் இருந்து இந்தியா அழைத்து வருவாராம் என்று மகாராஷ்டிரா நவநிர்மன் சேனா தலைவர் ராஜ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மகாராஷ்டிரா நவநிர்மன் சேனா தலைவர் ராஜ் தாக்கரே கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். அப்போது அவர் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று வருவதை கடுமையாக விமர்சித்தார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

மோடி

மோடி

என்ன அரசாங்கம் நடக்கிறது? வேலையை செய்யாமல் அனைத்திற்கும் தடை விதிப்பதிலேயே குறியாக உள்ளார்கள். நம் நாட்டு வரலாற்றில் முதல்முறையாக நம் பிரதமர் வெளிநாடுகளில் தான் அதிக நாட்கள் இருக்கிறார்.

சல்மான் கான்

சல்மான் கான்

சல்மான் கான் பஜ்ரங்கி பாய்ஜான் 2 படத்தை எடுக்கிறார் என்று கேள்விப்பட்டேன். அந்த படத்தில் அவர் வெளிநாட்டில் இருந்து மோடியை இந்தியா அழைத்து வருவார்.

புல்லட் ரயில்

புல்லட் ரயில்

மும்பையில் இருந்து அகமதாபாத்திற்கு புல்லட் ரயில் தேவையா? அதை ஏன் பிற மாநிலத்திற்கு அனுப்பக் கூடாது? குஜராத்திற்கு சென்று தோக்லா சாப்பிட்டுவிட்டு திரும்பலாம். அவ்வளவு தான்.

மோதல்

மோதல்

பாஜகவும், சிவசேனாவும் பொதுமக்கள் முன்னிலையில் மோதிக் கொள்வது போன்று கணவன், மனைவி கூடி சண்டை போட மாட்டார்கள். முதல்வரோ அந்த இரண்டு கட்சிகளுக்கு இடையே பிரச்சனை இல்லை என்கிறார். அப்படி என்றால் இது குறித்து சேனா அமைச்சர்களிடம் தான் கேட்க வேண்டும்.

நல்ல நாள்

நல்ல நாள்

பாஜகவுக்கு மட்டும் தான் நல்ல நாள் வந்துள்ளது. அந்த கட்சியுடன் கூட்டணி வைத்தவர்களுக்கும், அமைச்சர்களுக்கும் இல்லை.

குலாம் அலி

குலாம் அலி

குலாம் அலி பாடகர் என்பதால் அவரது நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. பாகிஸ்தானில் நம் கலைஞர்களுக்கு உரிய மரியாதை கிடைக்குமா? இந்தியாவிலேயே ஏராளமான திறமையான கலைஞர்கள் இருக்கையில் வெளிநாட்டவர் இங்கு பாடத் தேவை இல்லை.

English summary
Taking potshots at Narendra Modi on his frequent foreign tours, Maharashtra Navnirman Sena (MNS) President Raj Thackeray Thursday alleged that he is the first Prime Minister in Indian history to have remained out of the country for long.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X