For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நான் ஏன் குஜராத் சென்று மோடியை சந்தித்தேன் தெரியுமா?: சல்மான் கான்

By Siva
Google Oneindia Tamil News

மும்பை: நடிகர் சல்மான் கான் தான் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை சந்தித்தற்கான காரணத்தை தெரிவித்துள்ளார்.

குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பாஜகவின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு அவர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் சல்மான் கான் அண்மையில் குஜராத் சென்றார்.

அகமதாபாத்தில் பட்டம் விடும் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.

சல்மான்

சல்மான்

பட்டம் விடும் திருவிழாவில் கலந்து கொண்ட சல்மான் கான் மோடியுடன் சேர்ந்து பட்டம் விட்டார். பிரபல ஹீரோ பிரதமர் வேட்பாளருடன் சேர்ந்து பட்டம் விட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

புகழாரம்

புகழாரம்

பட்டம் விட்டதோடு மட்டுமல்லாமல் மோடியை சல்மான் புகழ்ந்து பேசினார். ஆனால் மோடிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய தான் தேவையில்லை என்று கூறினார். மேலும் குஜராத் கலவரம் தொடர்பாக மோடி யாரிடமும் மன்னிப்பு கேட்க தேவையில்லை என்று கூறி சல்மான் பலரின் கண்டனத்திற்கு ஆளானார்.

ராகுல்

ராகுல்

மோடியை புகழ்ந்துவிட்டு தனக்கு காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தியை தான் மிகவும் பிடிக்கும் என்று தெரிவித்தார் சல்மான். மேலும் ராகுல் அழைத்தால் எப்பொழுது வேண்டுமானாலும் அவருக்காக பிரச்சாரம் செய்ய தான் தயாராக இருப்பதாக அவர் மேலும் கூறினார்.

மோடி தந்திரம்

மோடி தந்திரம்

சல்மானை மோடி தான் குஜராத்திற்கு வரவழைத்து தன்னைப் பற்றி புகழ்ந்து பேச வைத்துள்ளார் என்று எல்லாம் பலர் நினைத்தனர்.

குஜராத் எதற்கு?

குஜராத் எதற்கு?

தான் நடித்துள்ள ஜெய் ஹோ படத்தின் விளம்பர நிகழச்சிகளில் கலந்து கொள்ளவே குஜராத் சென்றதாக சல்மான் கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், குஜராத் படங்களுக்கு பெரிய சந்தை ஆகும். அதனால் அங்கு சென்று படத்தை விளம்பரப்படுத்தினோம் என்றார்.

டெய்சி

டெய்சி

ஜெய் ஹோ படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகும் டெய்சி ஷா குஜராத்தைச் சேர்ந்தவர். அதனாலும் குஜராத் சென்றோம் என்றார் சல்மான் கான்.

மோடி கையில்

மோடி கையில்

என் படத்திற்கு வரி விலக்கு தேவை. ஜெய் ஹோ வரி விலக்கு பெற தகுதியான படம். வரி விலக்கு கிடைப்பது முதல்வர் மோடி கையில் உள்ளது. அதனாலும் அங்கு சென்றோம் என்று சல்மான் தெரிவித்தார்.

வழக்கு

வழக்கு

சல்மான் கான் 2002ம் ஆண்டு மும்பை பந்த்ரா பகுதியில் சாலையோரம் படுத்திருந்தவர்கள் மீது காரை ஏற்றிய வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கில் 64 சாட்சியங்களிடம் விசாரணை நடத்தப்படவிருக்கிறது.

English summary
The media in the country made a lot of furore when Salman Khan visited Gujarat CM Narendra Modi and participated in the kite flying festival of Gujarat with him on last Makar Sankranthi Day. A lot of people speculated that it was Modi's idea to bring in Salman Khan to say something good about him and thus tap Salman's fan base for him in the upcoming election. But Salman clarifies that the truth is far away from it. It is Salman who voluntarily went to Gujarat, to promote his upcoming action flick Jai Ho.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X