For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நித்தியானந்தா எங்கே.. வெளிநாட்டுக்கு தப்பி ஓட்டமா.. மத்திய அரசின் உதவியை நாடியது குஜராத் போலீஸ்!

நித்யானந்தா வெளிநாட்டுக்கு தப்பியுள்ளதாக கூறப்படுகிறது

Google Oneindia Tamil News

Recommended Video

    இமயமலையில் இருக்கேன்.. உயிரோடு இருக்க வேண்டும்.. நித்தியானந்தா வீடியோ

    அகமதாபாத்: "நித்யானந்தா வெளிநாட்டுக்கு தப்பி சென்று விட்டாலும், அவரை உரிய வழியில் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என்று குஜராத் போலீசார் தரப்பில் உறுதி தரப்பட்டுள்ளது. மேலும், சிறுவர்கள் கடத்தல் வழக்கில் நித்யானந்தாவை கைது செய்ய குஜராத் போலீசார் மத்திய அரசின் உதவியையும் நாடியுள்ளனர்.

    பெங்களூரு அருகே உள்ள பிடதியை தலைமையிடமாக கொண்டு ஆசிரமம் நடத்தி வருபவர் நித்யானந்தா. இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் இவருக்கு நிறைய கிளைகள் உள்ளன. இவர் மீது பரபரப்பு புகார் வராத நாளே கிடையாது.

    இந்நிலையில், அகமதாபாத்தில் ஹிராபூரில் உள்ள கிளையின் சார்பில், அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வீடு எடுத்து 4 குழந்தைகளை தங்க வைத்து இருந்ததாகவும், நன்கொடை வசூலிக்க வைத்து அவர்களை சித்ரவதை செய்ததாகவும் திடீர் புகார் ஒன்று எழுந்தது.

    வைரமுத்துவை திட்ட கூறி.. கெட்ட வார்த்தையை சொல்லி தந்தார் நித்தியானந்தா.. மீண்டுவந்த பெண் ஷாக் தகவல் வைரமுத்துவை திட்ட கூறி.. கெட்ட வார்த்தையை சொல்லி தந்தார் நித்தியானந்தா.. மீண்டுவந்த பெண் ஷாக் தகவல்

     4 குழந்தைகள்

    4 குழந்தைகள்

    இந்த புகார் தொடர்பாக நித்யானந்தா மற்றும் ஆசிரம நிர்வாகிகள் மீது அகமதாபாத் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அவர்களில் 2 பெண் நிர்வாகிகளும் நேற்று கைது செய்யப்பட்டு, அந்த 4 குழந்தைகளும் மீட்கப்பட்டனர். அவர்களில் இருவர் பெங்களூருவை சேர்ந்த ஜனார்த்தன சர்மாவின் குழந்தைகள் ஆவர். அவர்கள் இருவரும் ஜனார்த்தன சர்மாவிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டனர்.

     அபார்ட்மென்ட்

    அபார்ட்மென்ட்

    ஆனால், இவரது 2 மகள்களான லோக முத்ரா, நந்திதா சர்மா ஆகியோர் இன்னமும் அகமதாபாத் ஆசிரமத்தில்தான் இருக்கிறார்கள் என்பதால், அவர்களை மீட்க ஷர்மா குஜராத் கோர்ட்டின் உதவியை நாடினார். அப்போதுதான், அந்த அபார்ட்மென்ட்டில் குழந்தைகள் அடைத்து வைக்கப்பட்டு இருந்தது வெளிச்சத்துக்கு வந்தது.

     மத்திய அரசு

    மத்திய அரசு

    சிறுவர்களை அடைத்த வழக்கில் நித்யானந்தாவை போலீசார் அழைத்தபோதுதான், அவர் வெளிநாடு தப்பியதாக தெரியவந்துள்ளது. இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் இருந்த குஜராத் போலீசார், மத்திய அரசின் உதவியையும் நாடியுள்ளனர். ஒருவேளை நித்யானந்தா தப்பி சென்றிருந்தாலும், அவரை இந்தியா கொண்டுவர இந்திய வெளியுறவு அமைச்சகம், புலனாய்வு அமைப்புகளின் உதவியை நாட உள்ளதாகவும் அகமதாபாத் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    கைது செய்வோம்

    இது சம்பந்தமாக குஜராத் புறநகர் போலீஸ் எஸ்பி ஆர்வி அசாரி செய்தியாளர்களிடம் சொல்லும்போது, நித்யானந்தா வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று விட்டார் என்ற தகவல்கள் வருகின்றன, தேவைப்பட்டால் வெளிநாட்டில் இருக்கும் அவரை கைது செய்ய உரிய வழிகளை குஜராத் போலீசார் மேற்கொள்வார்கள், இந்தியா திரும்பினாலும் அவரை நிச்சயம் நாங்கள் கைது செய்வோம். நித்யானந்தாவின் பெண் சீடர்கள் இருவரை கைது செய்து விசாரித்து வருகிறோம்" என்றார்.

     டெல்லி பப்ளிக் பள்ளி

    டெல்லி பப்ளிக் பள்ளி

    இதனிடையே, நித்யானந்தா ஹிராபூர் கிராமத்தில் ஆசிரமம் நடத்தும் நிலம் டெல்லி பப்ளிக் பள்ளிக்கு சொந்தமானது என்ற விஷயம் தெரியவந்துள்ளது. இது சம்பந்தமாக அகமதாபாத் புறநகர் துணை போலீஸ் சூப்பிரண்டு கேடி கமாரியா சொல்லும்போது, "இந்த நிலத்தை ஆசிரமம் நடத்த சட்டத்துக்கு புறம்பாக டெல்லி பப்ளிக் பள்ளி தந்ததாக, அந்த பள்ளியின் முதல்வர் ஹிதேஷ் பூரியை போலீசார் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனிலும் விடுதலை செய்யப்பட்டார்" என்றார்.

    நித்தியானந்தாவின் பாஸ்போர்ட் போன 2018-ம் ஆண்டே காலாவதியாகிவிட்டதாகவும், போலி பாஸ்போர்ட்டை பயன்படுத்தி வெளிநாடு தப்பி சென்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளதால் நித்யானந்தா விவகாரம் மீண்டும் சூடு பிடித்துள்ளது.

    English summary
    gujarat police informed that, samiyar Nithyananda escaped abroad with fake passport
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X