For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

”சாதாரண குடிமகன் முதல் மக்கள் ஜனாதிபதி வரை”- கலாமிற்கு ஒடிசா மணல் சிற்பக் கலைஞர் அஞ்சலி

Google Oneindia Tamil News

புவனேஸ்வர்: மக்களின் ஜனாதிபதி அப்துல் கலாமின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஒடிசா மாநிலத்தின் புவனேஸ்வர் கடற்கரையில் அவரது உருவத்தை மணல் சிற்பமாக பிரபல கலைஞர் சுதர்சன் பட்நாயக் வடிவமைத்துள்ளார்.

சாதாரண குடிமகன் - ஏவுகணை மனிதர் - பாரத ரத்னா - மக்களின் குடியரசுத் தலைவர் எனத் திகழ்ந்தவருக்கு அஞ்சலி என அப்துல் கலாமின் வாழ்க்கையை மணல் சிற்பத்திற்குக் கீழே சிற்பக் கலைஞர் சுதர்சன் வார்த்தைகளில் குறிப்பிட்டுள்ளார்.

Sand Art Mr. Sudarshan Patnaik pays tribute to APJ Abdul Kalam

இது குறித்து கருத்து தெரிவித்த அவர், "மணல் சிற்பக் கலை பிரபலமடையாத நிலையில் 2005 ஆம் ஆண்டு அப்துல் கலாம் குடியரசு தலைவராக இருந்த போது தன்னை குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வரவழைத்துப் பேசி தன்னை ஊக்கப்படுத்தியதை நினைவு கூர்ந்தார்.

மேலும், தனது சொந்தப் பணத்தில் இருந்து 3 ஆயிரம் ரூபாயை கலாம் சன்மானமாக வழங்கி தன்னை கவுரவப்படுத்தியதாவும் அவர் தெரிவித்துள்ளார். அத்தகைய மாமனிதருக்கு தான் அஞ்சலி செலுத்தி மரியாதை செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

English summary
Former President APJ Abdul Kalam, the 'missile man' who came to be known as 'People's President' died yesterday. Sand artist Sudarsan Pattnaik has created a sand sculpture of Dr. APJ Abdul Kalam to pay tribute to the people’s President with a message “Tribute to A common man, Missile Man, Bharat Ratna, People’s President….” At Puri beach of Odisha on Tuesday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X